ETV Bharat / state

என்னை திமுகவினர் மிரட்டுனாங்க; அதனால் அதிக நிதி ஒதுக்குனேன் - தென்காசி ஊராட்சிக்குழு தலைவி ஓபன் டாக்!

author img

By

Published : Feb 20, 2023, 7:05 PM IST

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் தன்னை மிரட்டி தனக்கு வேண்டிய மாவட்ட கவுன்சிலர்களுக்கு அதிக நிதி ஒதுக்க கூறியதாக மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவி கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி குழு தலைவிக்கு திமுக மாவட்ட செயலாளர் மிரட்டல் விடுத்ததால் அதிக நிதி ஒதுக்கியுள்ளார்
ஊராட்சி குழு தலைவிக்கு திமுக மாவட்ட செயலாளர் மிரட்டல் விடுத்ததால் அதிக நிதி ஒதுக்கியுள்ளார்

என்னை திமுகவினர் மிரட்டுனாங்க; அதனால் அதிக நிதி ஒதுக்குனேன் - தென்காசி ஊராட்சிக்குழு தலைவி ஓபன் டாக்!

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தற்போது நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில், உள்ள 14 மாவட்ட கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பட்டியலிடப்பட்டது.

மொத்தமாக, 3 கோடியே 29 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிக்கப்பட்டது. அப்பொழுது, மாவட்டத்தில் உள்ள 14 கவுன்சிலர்களுக்கும் வெவ்வேறு விதமான நிதி ஒதுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து 2 -வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி கேள்வி எழுப்பினார்.

அப்பொழுது, அதற்கு பதில் அளித்த மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி, ''திமுகவின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருக்கு வேண்டிய கவுன்சிலர்கள் சிலர், மாவட்ட செயலாளரிடம் கூறி என்னை மிரட்டி அவர்களுக்கு அதிக நிதி கொடுக்க வைத்தார்கள். என்னை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் அழைத்து எனது செல்போனை பறித்துக்கொண்டு இதுபோன்று மிரட்டி ஒரு குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு அதிக நிதி ஒதுக்க செய்தார்கள்'' என மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி பதில் அளித்ததால் கூட்டமானது பெரும் பரபரப்பானது.

தொடர்ந்து, கவுன்சிலர்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மிரட்டப்பட்டிருந்தால் இது தொடர்பாக புகார் அளியுங்கள் எனவும், இது போன்று கூட்டத்தில் தான் மிரட்டப்பட்டதாக கூறுவது ஏன்? எனவும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பதில் அளித்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி, ''நான் மாவட்ட ஊராட்சி குழு தலைவி என்ற முறையில் சரியாகத்தான் நடந்து கொண்டேன்.

ஆனால், திமுக மாவட்ட செயலாளர் தன்னை மிரட்டி இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைத்தனர். ஆனால், அவருக்கு பயந்து நான் புகார் ஏதும் கொடுக்கவில்லை'' என பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரி கவுன்சிலர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் வசூல்.. தேர்தலில் பட்டுவாடா.. செந்தில் பாலாஜி நூதனம்.. ஜெயக்குமார் புகார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.