ETV Bharat / state

வரமான நீட்: வறுமையிலும் வென்று மருத்துவராகும் அரசுப்பள்ளி மாணவி!

author img

By

Published : Jan 31, 2022, 6:45 PM IST

சிவகங்கை மாவட்டம் அருகில் குடும்பம் வறுமையில் இருந்தாலும் வீட்டிலேயே பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவி தன்னம்பிக்கையுடன் பயின்றால் வெற்றிபெறலாம் என்று பசுமரத்தாணி போல் ஏனையோருக்கும் புரியும்வண்ணம் நம்பிக்கையை விதைத்துள்ளார்.

வறுமையிலும் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவராகும்  அரசு பள்ளி மாணவி- பொதுமக்கள் பாராட்டு
வறுமையிலும் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவராகும் அரசு பள்ளி மாணவி- பொதுமக்கள் பாராட்டு

சிவகங்கை: சிவகங்கையை அடுத்துள்ள காயாங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், காளிமுத்து தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் செந்தில்குமார் விறகு வெட்டும் வேலை செய்துவருகிறார்.

காளிமுத்து அதே கிராமத்தில் 100 நாள் வேலை உள்ளிட்ட கிடைக்கும் வேலைகளைச் செய்துவருகிறார். குடும்பம் வறுமையில் தவித்தாலும் செந்தில்குமார் தம்பதியர் பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்குத் தவறவில்லை.

இந்நிலையில் முதல் பெண் பிள்ளையான சிநேகா அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், மாங்குடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பையும் முடித்ததுடன் வீட்டிலிருந்தே நீட் தேர்விற்குப் படித்து தயாராகிவந்தார்.

என்னது கோச்சிங் இல்லாமல் சாதனையா?

இதனையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வில் 199 மதிப்பெண்களைப் பெற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில தேர்வாகியுள்ளார்.

வறுமையிலும் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவராகும் அரசுப்பள்ளி மாணவி - பொதுமக்கள் பாராட்டு

இது அந்த கிராம மக்களுக்கே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் தன்னம்பிக்கையுடன் பயின்றதாலேயே இந்த இடம் கிடைத்துள்ளதாகவும் நீட் தேர்வைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்றும் ஏனையோருக்கு நம்பிக்கையை விதைத்துள்ளார். மேலும் அக்கிராம மக்கள் மாணவியைப் பாராட்டிவருகின்றனர்.

நீட் தேர்வை வைத்து அச்சப்படுத்தப்பட்ட காலம்போய் அதனை எதிர்கொள்ளும் திராணியும் தன்னம்பிக்கையும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உண்டு என்பதை அண்மையில் வெளியாகும் அத்தேர்வின் முடிவுகள் தெளிவுப்படுத்திவருகின்றன.

இதையும் படிங்க:10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.