ETV Bharat / state

கசக்கும் தீபாவளி: இனிப்பு விற்பானையாளர்கள் வேதனை

author img

By

Published : Nov 13, 2020, 7:04 PM IST

Updated : Nov 13, 2020, 10:06 PM IST

தீபாவளி பண்டிகையை ஒட்டி மிக குறைந்த விலையில் எங்களது இனிப்பகத்தில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வகை இனிப்புகள் உள்ளன. புதுவகை இனிப்புகள் தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் இல்லை.

கசக்கும் தீபாவளி: இனிப்பு விற்பானையாளர்கள் வேதனை
கசக்கும் தீபாவளி: இனிப்பு விற்பானையாளர்கள் வேதனை

தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள், பலகாரங்கள் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகாததால் பொருளாதார இழப்புக்கு ஆளாகியிருப்பதாக சேலம் இனிப்பு மற்றும் பலகார விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக வாடிக்கையாளர்களுக்கு லட்டு, மைசூர்பாகு, ஜாங்கிரி உள்ளிட்ட பல்வேறு வகை இனிப்புகளை தயாரித்து , சேலம் சின்னக்கடை வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு மற்றும் பலகாரக் கடைகள் மூலம் விற்பனை செய்வது வழக்கம் .

இந்தப் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் பலகாரக் கடைகள் இயங்கி வருகின்றன. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றுவரை எதிர்பார்த்த அளவு இனிப்பு மற்றும் பலகார வகைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரங்கள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தீபாவளியன்று ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசு ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், 6 மாதங்களுக்கும் மேலாக பெரும்பான்மையான மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் .இதனால் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை களைகட்டவில்லை என்கிறார்கள் வணிகர்கள்.

இதுதொடர்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல இனிப்பக விற்பனையாளர்கள் ராஜேஷ் மற்றும் செந்தில்குமார் அளித்த பிரத்யேக பேட்டியில், "சேலத்தில் உள்ள சின்னக் கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் இனிப்பகக் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 10 சதவீதம் கூட இனிப்பு மற்றும் பலகாரங்கள் விற்பனை ஆகவில்லை.

தீபாவளி பண்டிகையை ஒட்டி மிக குறைந்த விலையில் எங்களது இனிப்பகத்தில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வகை இனிப்புகள் உள்ளன. புதுவகை இனிப்புகள் தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கிறோம் .ஆனால், இவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் இல்லை. மிகக் குறைந்த அளவிலேயே வாடிக்கையாளர்கள் இனிப்பு பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இனிப்பு பலகாரங்களை ஆர்டர் செய்து மொத்தமாக வாங்கும் நிறுவனத்தினர் ஒரு ஆர்டர் கூட இந்த ஆண்டு எங்களுக்கு வழங்கவில்லை. கரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது" என்று தெரிவித்தனர்.

கசக்கும் தீபாவளி: இனிப்பு விற்பானையாளர்கள் வேதனை

இதையும் படிங்க: சென்னையில் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை

Last Updated : Nov 13, 2020, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.