ETV Bharat / state

மேட்டூர் நீர்வரத்து உயர்வு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

author img

By

Published : Nov 8, 2021, 3:00 PM IST

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

v
v

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்ஞ வரும் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் இன்று (நவம்பர் 8) 117 அடியாக உயர்ந்து உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில்," தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பாசனத் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் வெகுவாக குறைக்கப்பட்டது. நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

இன்று (நவம்பர் 8) காலை நிலவரப்படி 117 அடியை எட்டி உள்ளது .

இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து உள்ளது .

அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியை நாளை (நவம்பர் 9) மாலை அல்லது இரவுக்குள் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் வெளியேற்றப்படும்.

அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றும் நிலையும் உருவாகும். எனவே காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கரையோர பகுதிகளில் வேடிக்கை பார்ப்பதற்கு புகைப்படம் எடுப்பதற்கும் வேலை நிமித்தமாகவும் யாரும் செல்ல வேண்டாம். உபரி நீர் திறக்கப்படுகின்ற பொழுது 30 ஆயிரம் கன அடிக்கு மேலாகவும் நீர் திறக்கப்படும்.

எனவே பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலில் உள்ள நபர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

நீர் செல்கின்ற 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி ஏரி படகு சவாரி செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.