ETV Bharat / state

நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர் - பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு!

author img

By

Published : Oct 22, 2019, 3:48 PM IST

சேலம்: சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

salem

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்துவருகிறது. இதனால் கடந்த சில தினங்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் இன்று நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதேபோல் சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து அவர்கள், 'தேசிய நெடுஞ்சாலையின் வடிகால்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேறாமல் சாலையிலேயே தங்கிவிடுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை' என்றனர்.

தேசிய நெடுஞ்சாலை சர்விஸ் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

தகவலறிந்து அங்குவிரைந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே மாநராட்சி ஊழியர்களை வரவழைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால்களின் அடைப்புகளைச் சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: ராசிபுரம் அருகே கனமழையால் பாலம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு

Intro:சீலநாயக்கன்பட்டி யில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Body:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் இரவு முதல் அதிகாலை வரை சேலத்தில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக சீலநாயக்கன்பட்டி யிலுள்ள திருச்சி நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஒவ்வொரு மழையின் போது சாலையில் ஓரமாக உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் சாலையில் வழிந்தோட வதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களிடம் சமாதானம் பேசியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அடைப்புகள் சரி செய்யப்பட்டன இதேபோன்று சேலத்தில் உள்ள அரிசிபாளையம் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகம், அங்கம்மாள் காலனி, அங்கன்வாடி மையம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.