ETV Bharat / state

'கனிமவள தாதுக்களை கொள்ளையடிக்கவே 8 வழிச்சாலைத் திட்டம்!'

author img

By

Published : Aug 22, 2019, 7:56 AM IST

சேலம்: கஞ்சமலையில் கனிம தாதுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவே சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக பொதுமக்கள்  குற்றம்சாட்டுகிறார்கள்.

எட்டு வழி சாலை திட்டம்  கஞ்ச மலையில் உள்ள கனிம தாது பொருட்களை எடுத்து செல்வதற்காகவே - பொதுமக்கள் குற்றச்சாட்டு


சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது கஞ்சமலை. இந்த மலையில் கனிமவளங்கள் அதிகளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு காரணம், இந்தக் கஞ்ச மலையில் உள்ள கனிம தாதுப் பொருட்களை எடுத்து செல்வதற்காகவே என்ற குற்றச்சாட்டும் நிலவிவருகிறது.

இந்நிலையில், கஞ்சமலை அடிவாரப் பகுதியில் உள்ள நிலங்களை அளக்கும் பணியில் வருவாய்த் துறையினர் திடீரென ஈடுபட்டதால் பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

salem
எட்டு வழிச்சாலைத் திட்டம் -பொதுமக்கள் குற்றச்சாட்டு

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "கடந்த நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் வசித்துவருகிறோம். விவசாயம் செய்தும் ஆடு மாடுகளை மேய்த்து வருவாயை தேடிவரும் நிலையில் தற்போது திடீரென தங்களின் நிலங்களை அளவீடு செய்து வருகின்றனர். எட்டு வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே இந்த நிலங்களை அளவீடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும் ஆளுங்கட்சியினரும் முனைப்புக் காட்டிவருகின்றனர்.

மேலும் ஏற்கனவே நிலம் அளக்க எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர், காவல் துறையினரின் துணையோடு எங்களை மிரட்டி இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். கனிம வளமிக்க இந்த கஞ்சமலையில் உள்ள இரும்பு தாதுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்றனர்.

எட்டு வழிச்சாலைத் திட்டம் கஞ்ச மலையில் உள்ள கனிம தாதுப் பொருட்களை எடுத்து செல்வதற்காகவே- பொதுமக்கள் குற்றச்சாட்டு

திடீரென வெளியேற வேண்டும் என்றால், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவிக்கும் மக்கள், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Intro:சேலம் அருகே கனிம வளங்கள் அதிகமாக உள்ள கஞ்சமலை அடிவார பகுதியில் உள்ள நிலங்களை அளக்கும் பணியில் வருவாய் துறையினர் திடீர் என ஈடுபட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி .Body:சேலம்

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கஞ்சமலை. இந்த மலையில் கனிம வளங்கள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலை திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு, இந்த கஞ்ச மலையில் உள்ள கனிம தாது பொருட்களை எடுத்து செல்வதற்காகவே என்ற குற்ற சாட்டும் நிலவி வருகிறது.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கடந்த நான்கு தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வருவதாகவும், விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை மேய்த்தும் வருவாயை தேடி வரும் நிலையில், தற்போது திடீர் என தங்களின் அனுபவத்தில் உள்ள நிலங்களை அளவீடு செய்து வருவதாகவும், எட்டு வழி சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே இந்த நிலங்களை அளவீடு செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும், ஆளுங்கட்சியினரும் முனைப்பு காட்டி வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் ஏற்கனவே நிலம் அளக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர், காவல்துறையினரின் துணையோடு தங்களை மிரட்டி இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், கனிம வளம் மிக்க இந்த கஞ்சமலையில் உள்ள இரும்பு தாது பொருட்களை எடுத்து செல்வதற்காகவே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இங்கு வசிக்கும் மக்களிடம் எந்த வித தகவலும் தெரிவிக்காமல், நிலத்தை அளவிடு செய்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவிகின்றனர்.

மேலும் கடந்த நான்கு தலைமுறையாக இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு எந்த வித மாற்று ஏற்பாடும் செய்திடாமல், திடீர் என்று வெளியேற வேண்டும் என்றால், தங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி விடும் என்றும் தெரிவிக்கும் மக்கள், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, அவர்களிடம் எந்த வித விளக்கமும் அளித்திடாமல் காவல்துறையினரின் துணையோடு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.