ETV Bharat / state

சேலத்தில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

author img

By

Published : Apr 14, 2020, 12:30 PM IST

சேலம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய பகுதிகளான 70 இடங்களை தடை செய்யப்பட்ட இடங்களாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்
தடை செய்யப்பட்ட பகுதிகள்

சேலத்தில், கரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியாக அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஸ் கூறுகையில், "சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்பு பணியாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இப்பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களது தொலைபேசி மூலம் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தினந்தோறும் தொடர்பு கொண்டு அவர்களது உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 2-ல் அம்மாபாளையம் மெயின் ரோடு, கே.கே.நகர், பொன் நகர், கோட்டம் எண் 19-ல் ஆசாத் நகர், தர்ம நகர், சுப்ரமணிய நகர், அம்மாபாளையம் மெயின் ரோடு பகுதி ஆகிய 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.29-ல் ஜம்புலிங்கம் தெரு, தொட்டு சந்திரய்யர் தெரு, தேவாங்கபுரம் புதுத் தெரு, குமாரசாமி தெரு, வைத்தி தெரு, அர்த்தனாரி தெரு, கோட்டம் எண்.30-ல் எ.வி.ஐயர் தெரு, பங்களா தெரு, மாணிக்கம் தெரு, சையத் மாதர் தெரு, கண்ணார தெரு, நாகேஷ் தெரு, மஜித் தெரு, பைகார தெரு, சாய்பாபா தெரு, லாடகார தெரு, அப்புசெட்டி தெரு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. கோட்டம் எண்.31ல் சின்னசாமி தெரு, ஜலால்கான் தெரு, துவால் அஹமத் தெரு, குண்டுபோடும் தெரு, அண்ணா நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதி, ஜானியன் தெரு, சையத் காஷிம் தெரு, முகமத் காஷிம் தெரு, வெங்கடசாமி தெரு, பால் தெரு ஆகிய 27 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

மேலும் அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண்.33ல் முத்துவள்ளி யாவூப் தெரு, முகமத்புறா, பழைய மார்க்கெட் தெரு, லட்சுமி நகர், சின்னக்கடை வீதி, ஆசாத் தெரு, வ.உ.சி மார்க்கெட், கோட்டம் எண்.36ல் பட்டநாயக்கர் காடு தெரு எண்.1, 2, 3, கோட்டம் எண்.39ல் நரசிம்மன் தெரு, வையாபுரி தெரு, சவுண்டம்மன் கோயில் தெரு, கோட்டம் எண்.43ல் சீனிவாசா நகர், பாலவிநாயகர் தெரு, அண்ணா நகர், அழகு நகர், தரணி கார்டன், சன்னியாசிகுண்டு மெயின் ரோடு, கோட்டம் எண்.44ல் காளிக்கவுண்டர் காடு, களரம்பட்டி மெயின் ரோடு ஆகிய 19 இடங்களும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.46ல் நரசிங்கபுரம் தெரு, கோட்டம் எண்.48ல் நெய்மண்டி அருணாசலம் தெரு எண்.2, தொல்காப்பியர் தெரு, லைன் ரோடு, கோட்டம் எண்.56 கருங்கல்பட்டி தெரு எண்.1, 2, 3, 4, பாண்டுரங்க விட்டல் தெரு எண்.1, 2, 3, 4, களரம்பட்டி தெரு எண்.1, 2, 3, 4, தெற்கு முனியப்பன் கோயில் தெரு, தெற்கு பிள்ளையார் கோயில் தெரு, செங்கல்பட்டி தெரு எண்.1, 2, 3, 4, வடக்கு முனியப்பன் கோயில் தெரு, கல்கி தெரு, கோட்டம் எண்.57ல் களரம்பட்டி மெயின் ரோடு (தேவி தியேட்டர் முதல் எருமாபாளையம் பஞ்சாயத்து வரை), அண்ணா வாத்தியார் தெரு, களரம்பட்டி கிழக்கு தெரு, பண்டிதர் நேரு தெரு, நேதாஜி நகர் ஆகிய 17 இடங்கள் என 4 மண்டலங்களிலும் மொத்தம் 70 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

தடை செய்யப்பட்ட இப்பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினந்தோறும் 3 வேளைகள் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் சேகரமாகும் திடக்கழிவுகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடைசெய்யப்பட்ட பகுதியினைச் சுற்றி மூன்று கிலோ மீட்டர் தூர அளவிற்கு அத்தியாவசிய பொருள்கள் விற்பனை கடைகள் உள்பட எவ்வித கடைகளும் செயல்பட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்திரவிட்டது.

அதனடிப்படையில் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட 14 கோட்டங்களில் 70 தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில்வசிப்பவர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காகவோ அல்லது பிற எவ்வித நிகழ்விற்காகவும் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், தடைசெய்யப்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தினந்தோறும் அனைத்து வீடுகளுக்கும் வழங்குவதற்கு 14 வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தடைசெய்யப்பட்ட பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் தற்காலிகமாக மாற்றியமைத்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தடைசெய்யப்பட்ட பகுதிகளை சுற்றி 3 கிலோ மீட்டர் தூர அளவிலுள்ள அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் தமிழ்நாடு அரசு உத்திரவினை கடைபிடித்து, கடைகளை மூடி கரோன வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்

மேலும், தடை உத்திரவினை மீறி செயல்படும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். இதனையடுத்து சேலம் காவல் துறை சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட தடைசெய்யப்பட்ட 70 இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான பொருள்களை அவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி சார்பில் வழங்குவது குறித்து விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: ஓடுங்க... நம்மள நோக்கி ஆபத்தான கிருமி வருது...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.