ETV Bharat / state

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

author img

By

Published : Nov 20, 2020, 5:47 PM IST

ராணிப்பேட்டை: சோளிங்கர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

anti corruption Dept raid Ranipet Sub-Registrar office
anti corruption Dept raid Ranipet Sub-Registrar office

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் அருண். இவர் சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராகப் பணியாற்றிவந்தார். அருண் லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் நேற்று (நவ. 19) அவரது அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது அருண் தனது அலுவலகத்திலிருந்து காரில் அரக்கோணத்திற்கு சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே காரை மடக்கிப்பிடித்தனர்.

அவரை மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துவந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடமும், அவருடைய அலுவலகப் பணியாளர்கள், எழுத்தர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டதில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய் 44 ஆயிரத்து 100 ரூபாய் சிக்கியது. இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க... மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.