ETV Bharat / state

இரு காவலர்களுக்கு சிறந்த பணிக்கான அண்ணா பதக்கம்!

author img

By

Published : Sep 15, 2019, 8:55 PM IST

ராமநாதபுரம்: சிறப்பாக பணியாற்றியதற்காக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரு காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Two Ramnathapuram cops

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வருடா வருடம் ‘பேரறிஞர் அண்ணா’ பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தாண்டில், 100 காவலர்களுக்கு அண்ணா பதக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில், இரண்டு பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்களாவர்.

கடலோர காவல் பாதுகாப்புக் குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ
கடலோர காவல் பாதுகாப்புக் குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ
தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ. லிங்க பாண்டியன்
தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ. லிங்க பாண்டியன்

அதில், ஒருவர் ராமநாதபுரம் கடலோர காவல் பாதுகாப்புக் குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ. மற்றொருவர் ராமநாதபுரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ. லிங்க பாண்டியன்.

Intro:இராமநாதபுரம்
செப்.15

இராமநாதபுரத்தைச் சேர்ந்த இரு காவலர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு.Body:தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் உயரதிகாரிகள் முதல் காவலர்களை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்.15 அண்ணா பிறந்த நாளையொட்டி அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 100 பேருக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் அறிவித்துள்ளது.
இதில் இரண்டு பேர் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறை அதிகாரிகள்.

ராமநாதபுரம் கடலோர காவல் பாதுகாப்பு குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ, ராமநாதபுரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ.லிங்க பாண்டியன், இதில் இளங்கோ என்பவர் 2017 ஆண்டு வரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஏடிஎஸ்பியாக பணியாற்றியவர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவர் பொன் மாணிக்க வேலுக்கு எதிராக சக காவல்துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சென்று டிஜிபியிடம் புகார் செய்தார். ஒழுங்காக பணியாற்றாவதவர் எப்படி அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டது என காவல் துறை வட்டாரத்தில கேள்வி நிலவி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.