ETV Bharat / state

பராமரிப்பின்றி கிடக்கும் ராமர், சீதா தீர்த்தங்கள் - சீரமைக்க கோரி பக்தர்கள் வலியுறுத்தல்

author img

By

Published : Sep 17, 2021, 9:52 AM IST

ராமேஸ்வரத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் ராமர், சீதா தீர்த்தங்களை சீரமைத்து பக்தர்கள் புனித நீராடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பின்றி கிடக்கும் தீர்த்தங்கள்
பராமரிப்பின்றி கிடக்கும் தீர்த்தங்கள்

ராமநாதபுரம்: உலக பிரசித்திப் பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான யாத்திரைகள் வந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு, கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் ராமர் தீர்த்தம், சீதா, வில்லூண்டி, லட்சுமணன், ஜடாயு உள்ளிட்ட தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி வழிபட்டு சென்றால் தான் தங்களுடைய பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும் என்ற ஒரு ஐதீகம் உள்ளது.

தற்போது கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பின்றி கிடக்கும் ராமர், சீதா தீர்த்தங்கள்

ராமேஸ்வரத்திலுள்ள ராமர் தீர்த்தம் முறையாக பராமரிப்பு இல்லாததால் தீர்த்த குளத்தில் கிடக்கும் நீர் நிறமாகி தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளதோடு சீதா தீர்த்தம் இருக்கின்ற இடம் தெரியாமல் தீர்த்தத்தின் சுற்றுச்சூழல் சேதமடைந்து.

உரிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் வெளிமாவட்டம், மாநிலத்திலிருந்து வரும் பக்தர்கள், யாத்திரிகள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

பராமரிப்பின்றி கிடக்கும் தீர்த்தங்கள்

இதற்கு சம்பந்தப்பட்ட ராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பராமரிப்பில்லாமல் கிடைக்கும் ராமர், சீதா தீர்த்தங்களை பராமரித்து பக்தர்கள் புனித நீராடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலை நடை திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.