ETV Bharat / state

'1, 368 தபால் வாக்குகள் செல்லாது'- ராமநாதபுரம் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு!

author img

By

Published : May 4, 2021, 2:43 PM IST

ராமநாதபுரம்: 11ஆயிரத்து 651 தபால் வாக்குகளில் ஆயிரத்து 368 தபால் வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

'11, 651 postal votes invalid '- Ramanathapuram election officials announced
'11, 651 postal votes invalid '- Ramanathapuram election officials announced

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி முடிவடைந்தது. இந்த நிலையில் மொத்தமாக ராமநாதபுரத்திலுள்ள 4 தொகுதிகளும் சேர்த்து 11ஆயிரத்து 651 தபால் வாக்குகள் பெறப்பட்டது. இதில் ஆயிரத்து 368 ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிவாரியாக பார்க்கும்போது பரமக்குடி தொகுதியில் மொத்தமாக 3ஆயிரத்து 494 வாக்குகளில் திமுக ஆயிரத்து 848, அதிமுக ஆயிரத்து 91, தேமுதிக 21 நோட்டா 16 என வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவாடானை தொகுதியில் மொத்தமாக 2ஆயிரத்து541, காங்கிரஸ் கட்சிக்கு 949, அதிமுகவிற்கு 463, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 388, நாம் தமிழர் கட்சிக்கு 98 , மக்கள் நீதி மய்யம் கட்சி 19 நோட்டாவிற்கு 3 பதிவாகியுள்ளன.

ராமநாதபுரம் தொகுதியில் மொத்தமாக 2353 வாக்குகளில் திமுகவிற்கு 1370, பாஜவிற்கு 341, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 50, நாம் தமிழர் கட்சிக்கு 366 மக்கள் நீதி மய்யம் கட்சி 23 நோட்டா 6 வாக்குகள் பெற்றுள்ளன.

முதுகுளத்தூர் தொகுதியை பொறுத்தவரை, கிடைத்துள்ளது இதில் திமுகவிற்கு 1573, அதிமுகவிற்கு 1014 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 266, நாம் தமிழர் கட்சிக்கு 145, நோட்டாவிற்கு 2 வாக்குகள் கிடைத்தன.

இதில் சரியாக உறையிடாதது. சரியாக சீல் வைக்காதது ஆகிய காரணங்களுக்காக ஆயிரத்து368 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது என தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.