ETV Bharat / state

புதுக்கோட்டை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஊர் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:57 PM IST

Pudukkottai Jallikattu Bull: புதுக்கோட்டை அருகே உள்ள மேலக்கொல்லையில் வயது மூப்பின் காரணமாக இறந்து போன நெத்தி வெள்ளை என்கிற ஜல்லிக்கட்டு காளைக்கு மாடு பிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது

வயது மூப்பின் காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஊர் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்
வயது மூப்பின் காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஊர் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்

வயது மூப்பின் காரணமாக இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஊர் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை: திருக்கட்டளை பஞ்சாயத்துக்குட்பட்ட மேலக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், இவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல வருடமாக ஐந்திற்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வரும் நாகராஜ், தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் தன்னுடைய ஜல்லிக்கட்டு காளைகளைப் பங்கு பெறச் செய்வார். இந்த ஜல்லிக்கட்டு காளைகளும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று வருகிறது.

மேலும் நாகராஜன் வளர்த்து வரும் நெத்தி வெள்ளை காளை மேலக்கொல்லை பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த 20 வருடங்களாக நாகராஜன் நெத்தி வெள்ளை காளையை மிகவும் பாசமாகவும், சிறப்பாகப் பராமரித்தும் வந்துள்ளார்.

குறிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் கலந்து கொண்டு இதுவரைக்கும் நெத்தி வெள்ளை ஜல்லிக்கட்டு காளை எந்த வீரர்களாலும் பிடிபடாமல் இருந்தது. மேலும் தமிழ்நாடு பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டாலும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளது.

குறிப்பாக நாகராஜ் வளர்க்கும் நெத்தி வெள்ளை ஜல்லிக்கட்டு காளை அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் பரிச்சயமாகக் காளையாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயது மூப்பின் காரணமாக நெத்தி வெள்ளை காளை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென நெத்தி வெள்ளை காளை உயிரிழந்தது. இந்நிலையில் காளை உயிரிழந்ததை அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர்.

அவர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்து போன ஜல்லிக்கட்டு காளைக்குக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரைக் கண் கலங்க வைத்தது. பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திய பின்னர் இறந்து போன நெத்தி வெள்ளை ஜல்லிக்கட்டு காளையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அவருடைய உறவினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரண்டு கி.மீ., தொலைவில் ஊர்வலமாக ஜல்லிக்கட்டு காளையை வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்று மீண்டும் மேலக்கொல்லை அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: மூதாட்டி தவற விட்ட தங்க நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளம்பெண்!து வருகிறார். மேலும் தொடர்ந்து பல வருடமாக ஐந்திற்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வரும் நாகராஜ், தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் தன்னுடைய ஜல்லிக்கட்டு காளைகளை பங்கு பெறச் செய்வார். இந்த ஜல்லிக்கட்டு காளைகளும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வருகிறது.

மேலும் நாகராஜன் வளர்த்து வரும் நெத்தி வெள்ளை காளை மேலக்கொல்லை பகுதியில் மிகவும் பிரபலமானது. கடந்த 20 வருடங்களாக நாகராஜன் நெத்தி வெள்ளை காளையை மிகவும் பாசமாகவும், சிறப்பாக பராமரித்தும் வந்துள்ளார்.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட வாடிவாசல்களில் கலந்து கொண்டு இதுவரைக்கும் நெத்தி வெள்ளை ஜல்லிக்கட்டு காளை எந்த வீரர்களாலும் பிடிபடாமல் இருந்தது. மேலும் தமிழ்நாடு பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டாலும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.

குறிப்பாக நாகராஜ் வளர்க்கும் நெத்தி வெள்ளை ஜல்லிக்கட்டு காளை அப்பகுதி பொதுமக்களிடையே மிகவும் பரிச்சயமாக காளையாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயது மூப்பின் காரணமாக நெத்தி வெள்ளை காளை உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென நெத்தி வெள்ளை காளை உயிரிழந்தது. இந்நிலையில் காளை உயிரிழந்ததை அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்தனர்.

அவர்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்து போன ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை கண் கலங்க வைத்தது. பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திய பின்னர் இறந்து போன நெத்தி வெள்ளை ஜல்லிக்கட்டு காளையின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அவருடைய உறவினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரண்டு கி.மீ., தொலைவில் ஊர்வலமாக ஜல்லிக்கட்டு காளையை வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்று மீண்டும் மேலக்கொல்லை அருகே உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: மூதாட்டி தவற விட்ட தங்க நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளம்பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.