ETV Bharat / state

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 12, 2020, 12:03 PM IST

புதுக்கோட்டை: திருமயம் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Bus Accident
Thirumayam bus accident

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில், சென்னையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் கதிர், கௌஷிக் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமயம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து

விபத்தில் இறந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாடக்குளம் கண்மாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

Intro:Body:*திருமயத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம்.*

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் சென்னையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கதிர் கௌஷிக் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் அந்த மூன்று பேரில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டு இமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மற்ற இருவர் உடல்களையும் மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.