ETV Bharat / state

ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

author img

By

Published : Oct 22, 2020, 12:58 PM IST

புதுக்கோட்டை: விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.

அங்கு முதல்கட்டமாக விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்டுள்ள, ஐ.டி.சி தொழிற்சாலையை திறந்துவைத்தார். அதன்பின் அவர், விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார்.

முதலமைச்சர் சிலையை திறந்துவைத்தபோது

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்ததன் நினைவாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட உள்ளார். அதைத் தொடர்ந்து சிறு, குறு தொழில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.