ETV Bharat / state

'2 லட்சம் ரூபாய் தந்தால்தான் இந்தியா திரும்ப முடியும்' - கும்பலிடம் சிக்கித் தவிக்கும் ஏழைப்பெண்!

author img

By

Published : Oct 14, 2019, 4:26 PM IST

புதுக்கோட்டை: அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி, பெண்ணை ஏமாற்றி வெளிநாட்டுக்கு வரச்செய்து, இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

pudukkottai collector office latest petition, பெண்ணை வெளிநாட்டிற்கு வரவைத்து மிரட்டல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஜெயம். இவருக்குத் திருமணமான இரண்டு மகள்களும் திருமணம் ஆகாத ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் லட்சுமணன் என்பவர் ஜெயமிடம் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி 70 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை மஸ்கட்டிற்கு அனுப்பியுள்ளார்.

வெளிநாடு சென்ற ஜெயமை- பார்வதி, பாத்திமா, காசிம், அக்கீம் ஆகியோர் அழைத்துச்சென்று ஒரு அறையில் அடைத்துவைத்து, 'இரண்டு லட்சம் பணம் தந்தால்தான் நீ மீண்டும் இந்தியாவிற்குச் செல்ல முடியும்' என்று கூறி சித்ரவதை செய்துள்ளனர்.

ஜெயமின் உறவினர்கள் அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, இரண்டு லட்சம் பணம் தந்தால்தான் தன்னை விடுவிப்பதாக அவர்கள் கூறியதை தெரிவித்துள்ளார். இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெண்ணை வெளிநாட்டிற்கு வரவைத்து மிரட்டல்

இது குறித்து ஜெயமின் மகள் ஜெயந்தி, "எங்களுக்குத் திருமணமாகாத ஒரு சகோதரி இருக்கிறாள். அவளை நல்ல முறையில் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனது தாய் வெளிநாடு செல்ல வேண்டும் என முடிவெடுத்தார். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் எனது தாயார் வீட்டிற்கு வர வேண்டும், அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ. 22 லட்சம் மதிப்புள்ள தங்க தலைப்பாகை!

Intro:வெளிநாட்டில் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றி வெளிநாடுக்கு அனுப்பி 200000 பணம் தந்தால் தான் இந்தியாவிற்கு அனுப்புவோம் என பெண்ணை கொடுமைப்படுத்தி மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்..


Body:வெளிநாட்டில் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றி வெளிநாடுக்கு அனுப்பி 200000 பணம் தந்தால் தான் இந்தியாவிற்கு அனுப்புவோம் என மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்ற பெண்மணி இவருக்கு திருமணமான இரண்டு மகள்களும் திருமணம் ஆகாத ஒரு மகளும் உள்ளனர் கடந்த மாதம் லட்சுமணன் என்பவர் ஜெயம் என்பவரிடம் வெளி நாட்டில் வீட்டு வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி எழுபதாயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளார். மஸ்கட் எனும் ஊருக்கு சென்ற ஜெயத்தை அங்குள்ள பார்வதி, பாத்திமா, காசிம்,அக்கீம் ஆகியோர் அழைத்துச்சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து இரண்டு லட்சம் தந்தால்தான் நீ திருப்பி இந்தியாவிற்கு செல்ல முடியும் என்று கூறி கொடுமை படுத்தியுள்ளனர். விஜயத்தின் உறவினர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது 2 லட்சம் பணம் தந்தால்தான் இவரை விடுவோம் என்று மிரட்டியுள்ளனர் இதனை கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து விஷயத்தை தெரிவிக்க வேண்டும் என முடிவுசெய்து விஜயத்தின் உறவினர்கள் அனைவரும் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் இதுகுறித்து ஜெயத்தின் மகள் ஜெயந்தி தெரிவித்ததாவது,

எங்களுக்கு திருமணம் ஆகாத ஒரு தங்கை இருக்கிறாள் அவளை நல்ல முறையில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனது அம்மா வெளிநாடு செல்லவேண்டும் என முடிவெடுத்தார் ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் உங்களது தாயார் வீட்டிற்கு வர வேண்டும் அதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.