ETV Bharat / state

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை!

author img

By

Published : Nov 20, 2020, 10:55 AM IST

புதுக்கோட்டை : சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

imprisonment
imprisonment

2019ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் அந்நபரை நேராக பார்த்து திட்டியுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்காமல் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனே சிறுமியின் தாயார் இது குறித்து திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போதைய காவல் ஆய்வாளர் செல்வி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கு புதுகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதில் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து, அவரது தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.