ETV Bharat / state

ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற நரிக்குறவர்கள்: காவல் துறையினருடன் வாக்குவாதம்

author img

By

Published : Jul 20, 2021, 9:45 AM IST

புதுக்கோட்டையில் ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற நரிக்குறவர்களும், அவர்களை உள்ளே அனுமதிக்காத காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற நரிக்குறவர்கள்
ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற நரிக்குறவர்கள்

புதுக்கோட்டை: கறம்பக்குடியிலுள்ள நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நரிக்குறவர் காலனியிலுள்ள குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் புதிய வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 32 வீடுகள் கட்ட பணியாணை ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு விட்டது.

கட்டுமான பணிகளுக்கு உபகரணங்கள் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில், மணல் தட்டுப்பாடு இருப்பதாகவும், வீடு கட்டுவதற்கு சவுது மணல் ஆற்றில் அள்ளிக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல் துறையுடன் வாக்குவாதம்

ஆனால், இதுவரை அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தற்போதுள்ள குடியிருப்புகளில் வசிக்க முடியாது எனவும், எனவே கட்டுமான பணிகளுக்கு சவுடு மணல் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்க 50க்கும் மேற்பட்டர்கள் நேற்று (ஜூலை 20) ஆட்சியர் அலுவகத்திற்கு சென்றனர்.

ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் காவல் துறையினருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஐந்து பேர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவதூறு வழக்கு: ஹெச். ராஜாவின் முன்பிணை மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.