ETV Bharat / state

'அடிச்சாலும் துவைத்தாலும் வெளுக்காத ஒரே சாயம் விவசாயம்' - கோரிக்கை மாநாட்டில் விஜயபாஸ்கர்

author img

By

Published : Jul 6, 2023, 3:44 PM IST

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு புதுக்கோட்டை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

கோரிக்கை மாநாட்டில் விஜயபாஸ்கர்
கோரிக்கை மாநாட்டில் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு, நகர்மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 67 விவசாயிகள் நினைவு உழவர் தின பேரணி நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தனர். இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ரவி தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் மாவட்ட செயலாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பழனியாண்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு சங்க நிர்வாகி மிசா மாரிமுத்து, அரிமளம் சுப்பையா உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய விஜயபாஸ்கர், ''அடிச்சாலும் துவைத்தாலும் வெளுக்காத ஒரே சாயம் விவசாயம் மட்டும் தான், அப்படிப்பட்டவர்கள் விவசாயிகள்.

யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். மண்ணை நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட மனிதகுலம் தான் விவசாயிகள். உயர்வும் நேர்மையும் பன்முகத்தன்மையும் கொண்டவர்கள் விவசாயிகள்.

அதிமுக ஆட்சியில் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை தொடங்கி வைத்தார். சேற்றில் விவசாயிகள் கை வைத்தால் தான் ஆளும் கட்சி உணவு உண்ண வேண்டும். கோட்டையில் கொத்தளம் நிரந்தரம் கிடையாது. விவசாயிகளின் உணர்வுகளை யார் குலைக்க நினைத்தாலும் சுவற்றில் அடித்த பந்தாக மாறும். முறையாக அனுமதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் நிறம் கிடையாது.

அதேபோல் விவசாயிகளுக்கு கட்சி சாயம் கிடையாது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் துணை புரியனும். சாதுபோல் இருந்த விவசாய சங்கங்களைப் பொங்கி எழ வைத்துள்ளனர். இது கடும் கண்டனதுக்குரியது” என்று கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ''தமிழக அரசு மருத்துவப் படிப்பதற்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது கண்டனத்திற்குரியது. இதுதான் திமுகவின் சாதனை. மருத்துவத்துறை இன்று தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்குப் போராடி வருகிறது.

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்காவிட்டால், 8 மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசிற்கு மனம் இல்லை.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சார்பில் இலவச மின்சாரம் கேட்டு போராடிய விவசாயிகளுக்கு நினைவு நாளை ஒட்டி பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு நடத்துவதற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை ஏற்கனவே அனுமதி அளித்து அளித்திருந்தது. ஆனால் பேரணிக்கு அனுமதி கிடையாது என்று கூறி விவசாயிகளைக் கைது செய்வதற்கான முயற்சியை எடுத்துள்ளது. இது கண்டனத்துக்குரியது'' என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், ''விவசாயிகள் சேற்றில் காலை வைத்தால் தான் ஆட்சியாளர்கள் உட்பட அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை மறந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அதிமுக ஆட்சி சார்பில் 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு முதல் கட்டமாக புதுக்கோட்டை வெள்ளாறு வரை பணிகளைத் தொடங்குவதற்கு 1400 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி பெற்று அதில் 600 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

ஆனால், திமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகள் வரை இதுவரை இந்த திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரியில் இருந்து திறந்து விடப்படும் நீர் வீணாக கடலில் கலக்கும் நீரை தான் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் திருப்பி விடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன” என்று கூறினார்.

இதையும் படிங்க: திமுகவில் இளைஞர் அணி பதவி நியமனம்; தனது ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டிய தருமபுரி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.