ETV Bharat / state

'டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக' - அதிமுகவுக்கு வாக்களித்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள்!

author img

By

Published : Jan 12, 2020, 11:00 AM IST

Updated : Jan 12, 2020, 5:45 PM IST

புதுக்கோட்டை: மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் அதிமுகவுக்கு வாக்களித்ததால், புதுக்கோட்டையை திமுக பறிகொடுத்துள்ளது.

திமுகவிற்கு துரோகம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்
திமுகவிற்கு துரோகம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர்களுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, புதுக்கோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 13 இடங்களில் திமுக கூட்டணியும் 9 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றன. இதனால் நேற்று நடந்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார். இது திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த கலைவாணி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வாக்கினை செலுத்தியதை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது 13 இடங்களில் இருந்த திமுக 10ஆக குறைந்து 9 இடங்களில் இருந்த அதிமுக 12ஆக உயர்ந்து வெற்றிபெற்றது. இதன்மூலம் திமுக உறுப்பினர் உட்பட மூவர் கட்சிமாறி அதிமுகவுக்கு வாக்களித்தது உறுதியானது.

இதனால் மாநிலம் முழுவதும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்களாக 13 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய திமுக, ஒரு இடத்தை இழந்தது.

இரு தினங்களுக்கு முன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால், மாவட்ட அளவில் காங்கிரஸுக்கு திமுக எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது" என குறிப்பிட்டிருந்தனர். இதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் கூறியிருந்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்த தேர்தலிலும் அது பிரதிபலித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது திமுக கூட்டணியுடன் வந்த காங்கிரஸ் உறுப்பினர் உமாமகேஸ்வரி, பிறகு அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்து பெற்று எதிர்க்கட்சி கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் அதிமுக-வினருடன் சென்று எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போதுதான் காங்கிரஸ் உறுப்பினர் உமாமகேஸ்வரி அதிமுகவுக்கு வாக்களித்தது தெரியவந்தது.

அதேபோல மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் இரு வேட்பாளர்களும் சமநிலையில் இருந்தனர். அமைச்சரிடம் ஆசி பெற்றவரும், காங்கிரஸ் உறுப்பினறுமான உமாமகேஸ்வரி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.

திமுகவிற்கு துரோகம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பியபோது, "அரசியலில் மேஜிக் நடப்பது சகஜம் இதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவினருக்கு மோசடி என்றாலே என்னவென்றே தெரியாதாம்...! - சொல்கிறார் அமைச்சர்

Intro:Body:*திமுக வழியில் சென்று வாக்களித்து சேர்மேன் ஆன காங்கிரஸ் வேட்பாளர். புதுகையில் பரபரப்பு*


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் எந்தவித பிரச்சனையுமின்றி நடந்து முடிந்தது. அதில் 13 இடங்களில் திமுகவும் ஒன்பது இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. அதனால் இன்று நடந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக தான் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு மாறாக அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார் இது திமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 11 இடங்களில் திமுகவும், திமுக கூட்டணியான காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரும், திமுக சார்பில் கலைவாணி என்பவரின் வேட்பாளராக தேர்தலில் நிறுத்தப்பட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையின் போது 13 இடங்களில் இருந்த திமுக 10 வாக்குகளும், ஒன்பது இடங்களில் இருந்த அதிமுக 12 வாக்குகளும் பெற்ற அதிமுக வெற்றி அடைந்தது. அதேபோல துணைத்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் இரு கட்சிகளும் சம நிலையில் வந்ததால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் மனுத் தாக்கல் செய்திருந்த உமாமகேஸ்வரி என்பவர் வெற்றி பெற்றார். திமுகவிற்கு என்ன நடந்தது என்ற குழப்பத்துடன் இருந்தனர் அவர்களுக்கு மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவருக்கும் இது எப்படி சாத்தியமானது என்று கேள்வி எழுந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் தான் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இன்று மாலை இந்த முடிவு வந்த பிறகு திமுக கூட்டணி உடன் வந்த காங்கிரஸ் வேட்பாளர் உமாமகேஸ்வரி அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து வாழ்த்து பெற்ற தோடு மட்டுமில்லாமல் அதிமுக கட்சியினருடன் நடந்தே சென்று எம்ஜிஆர் சிலை மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலையிட்டனர். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுகவினரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இப்படி கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று திமுகவினர் பெரும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பியபோது அரசியலில் மேஜிக் நடப்பது சகஜம் இதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பல கேள்விகளுக்கு நடுவே எஸ்கேப் ஆகிவிட்டார்.Conclusion:
Last Updated : Jan 12, 2020, 5:45 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.