ETV Bharat / state

‘தமிழக அரசு வார்த்தை ஜாலங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ - விஜயபாஸ்கர் காட்டம்!

author img

By

Published : Aug 5, 2023, 9:08 PM IST

புதுகோட்டையில் மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சுகாதாரத்துறை தூங்குகிறது என கடுமையாக விமர்சனம் செய்தார்.

புதுகோட்டையில் மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுகோட்டையில் மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுகோட்டையில் மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுகோட்டை: ஆத்மா யோகா மையம் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி மற்றும் விருதுகள் வழங்கும் விழா புதுகோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பின்வருமாறு கூறியதாவது, "ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக இந்திய மருத்துவத்தையும் ஊக்குவிக்க வேண்டும். அதற்காக தான் யோகா, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய இந்திய மருத்துவத்தை ஊக்குவிப்பதற்கு அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக செங்கல்பட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச அளவில் யோகா மையத்தை தொடங்கியது. ஆனால் தற்போது அந்த யோகா மையங்கள் செயல்படாமல் உள்ளது.

அதிமுக ஆட்சியில் இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மருத்துவர்களும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் என்று தமிழக அரசால் அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்க நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மருத்துவர்களும் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் என்று அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்கவில்லை.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் என்பது மருத்துவர்களை கண்காணிப்பது, வரைமுறைகளை நெறிமுறைபடுத்தும் கவுன்சில். ஆனால் தற்போது அது செயல்படாமல் உள்ளது. அதற்கான தேர்தல் இந்த அரசால் நடத்தப்படாமல், உறுப்பினர்கள் தலைவர் என தேர்ந்தெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது தலை இல்லாமல் உடம்பு மட்டும் இருப்பது போல் உள்ளது.

சுகாதாரத்துறை மிகுந்த விழிப்போடு செயல்பட வேண்டும். இந்த அரசு வார்த்தை ஜாலங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை என்பது 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்கக்கூடிய துறை, ஆனால் தற்போது அது தூங்கிக் கொண்டு உள்ளது. மருத்துவ தேர்வு ஆணையத்தின் மூலமாக அதிமுக ஆட்சியில் ஒரு ஆண்டிற்கு நான்காயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது 400 பணியாளர்களைக் கூட இந்த அரசு இதுவரை நியமிக்கவில்லை.

கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீடு கொடுத்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்" என புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திமுக அரசு மீது தன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் சேர 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.