ETV Bharat / state

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது!

author img

By

Published : Oct 21, 2020, 5:39 PM IST

பெரம்பலூர்: லாடபுரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது!
Sexual harassment

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரது மகன் நடேசன்.

இவர் அப்பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நேற்றிரவு (அக்.21) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.