ETV Bharat / state

மளிகைக் கடையில் தீவிபத்து; ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

author img

By

Published : Jul 24, 2020, 10:12 PM IST

நாமக்கல்: சேந்தமங்கலம் அருகேவுள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

Grocery store fire; One lakh worth of goods damaged!
Grocery store fire; One lakh worth of goods damaged!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் முக்கிய சாலை பகுதியில் அதிகளவு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, நாமக்கல் ராசிபுரம் சாலை அடைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ராஜசேகர் என்பவர் மளிகைக் கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை24) மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தில் கடையில் இருந்த மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

மேலும் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான சாலையின் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு, காயத்ரி ரகுராம் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.