ETV Bharat / state

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பிடிவாரண்ட்!

author img

By

Published : Nov 2, 2021, 7:52 PM IST

பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால், நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பரமத்தி சார்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட்
நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட்

நாமக்கல்: கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர், விவசாயி ராசப்பன். இவரது நிலத்தின் பட்டாவில் கடவுள்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ராசப்பன் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு ராசப்பன் நிலப்பட்டாவில் உள்ள கடவுள்களின் பெயர்களை நீக்கி, தனிப் பட்டாவாக வழங்க பரமத்தி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்குப் பிடிவாரண்ட்

இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியர், பரமத்திவேலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், நீண்ட காலமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து விவசாயி ராசப்பன் மீண்டும் அதே நீதிமன்றத்தில் 'நிறைவேற்று மனு' தாக்கல் செய்தார்.

விசாரணையில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.