ETV Bharat / state

பட்ஜெட் 2019: லாரி உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு!

author img

By

Published : Jul 1, 2019, 12:08 PM IST

நாமக்கல்: மத்திய நிதிநிலை அறிக்கையில் நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளை பகிர்ந்துகொண்டனர்.

vag

கோழிப்பண்ணைத் தொழிலைப் போல் நாமக்கல் மாவட்டத்தில் லாரி பாடி கட்டும் தொழிலும் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இங்கு லாரிகளின் பாடியை கட்டிச்செல்கின்றனர். இங்கு கட்டுமானம் செய்யப்படும் லாரியானது உலகத்தரம் வாய்ந்ததாக கருத்தப்படும் நிலையில், இக்கட்டுமான வேலையை வட மாநிலத்தவர்கள் பலரும் மேற்கொள்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி வேண்டும்:

இந்நிலையில் 'பட்ஜெட் 2019-20' இல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்துகொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வாங்கிலி, லாரி உரிமையாளர்களின் வருமானத்தொகை அதிகப்படியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வருமானவரி பெருமளவில் விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு லாரி உரிமையாளர்களை பெருமளவில் பாதிக்கிறது என்றார்.

மேலும் அவர், பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களை மத்திய அரசு ஜி.எஸ்.டிக்குள் உட்படுத்தவேண்டும் எனவும், அவ்வாறு செய்வதினால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வாங்கிலி பேட்டி

ARAI தர சான்றிதழ் விதிமுறையை எளிமைப்படுத்த வேண்டும்:

லாரி பாடி கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன், ஜி.எஸ்.டி. வரியினால் பல்வேறு சிறு குறு லாரி கட்டுமான நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. மத்திய அரசு லாரி பாடி கட்டும் நிறுவனங்களுக்கு விதித்த ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர், தற்போது புதிதாக ARAI என்ற தரச் சான்றிதழை கட்டாயமாக கட்டுமான தொழிற்சாலைகள் வைத்திருக்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சான்றிதழ் வைத்துள்ள நிறுவனங்களில் கட்டுமானப் பணியை மேற்கொண்ட லாரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரம் கொண்டதாகும். இந்த சான்றிதழ் இல்லாத கட்டுமான நிறுவனங்களில் பாடி கட்டும் லாரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்குவதில்லை.

இந்த தரச் சான்றிதழ் வாங்குவதற்கு செலவுகள் அதிகமாகவுள்ளது. இந்த சான்றிதழுக்கு ஆன்லைன் பதிவு செய்து ஆறுமாதங்களுக்குப் பிறகுதான் சான்றிதழ்கள் கைகளுக்கு வந்து சேர்கிறது. அதன்காரணமாக மத்திய அரசு இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

லாரி பாடி கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன்
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.