ETV Bharat / state

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில்: தருமபுர ஆதீனம் முன்னிலையில் பாலாலயம்

author img

By

Published : Dec 14, 2022, 11:06 AM IST

மயிலாடுதுறையில் உள்ள வாதான்யேஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதினம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலஸ்தாபனம் எனப்படும் பாலாலயம் சிறப்பாக நடைபெற்றது.

வதான்யேஸ்வரர் கோயில்: தருமபுர ஆதீனம் முன்னிலையில் பாலாலயம்
வதான்யேஸ்வரர் கோயில்: தருமபுர ஆதீனம் முன்னிலையில் பாலாலயம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வதான்யேஸ்வரர் கோயில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமானது. ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயிலில் வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை தனி சன்னதியில் உள்ளனர். விநாயகர், முருகன், துர்க்கை, மேதாதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உப சன்னதிகளும் உள்ளன.

மேலும் கஷ்டங்களைப் போக்கும் வரத்தை இத்தலத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. இந்த நிலையில் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் ஞானாம்பிகை உள்ளிட்ட சுற்றுக் கோயில்கள் ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலஸ்தாபனம் எனப்படும் பாலாலயம் இன்று (டிச.14) காலை நடைபெற்றது.

இந்த பாலாலயம் தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மூன்று யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து விமான பாலாலயம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: சாட்டையடி திருவிழா: பக்தர்கள் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.