ETV Bharat / state

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாகையில் 50 இடங்களில் போராட்டம் - எம்பி செல்வராஜ்

author img

By

Published : Nov 12, 2020, 1:13 PM IST

நாகப்பட்டினம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து வருகின்ற 26ஆம் தேதி நாகயைில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் தெரிவித்தார்.

nagapattinam mp
nagapattinam mp

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்பி செல்வராஜ், "மோடி அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் வேளாண் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால், விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மின்சார திருத்த மசோதா என்ற பெயரில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்கள், விவசாயிகள் என்று எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களையும் மத்திய அரசு வஞ்சித்துள்ளது.

இவ்வாறு மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என்று எல்லோரையும் வஞ்சித்து வருகிறது. இந்த அரசை கண்டித்து வருகின்ற 26ம் தேதி நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள்.

நாகையில் 50 இடங்களில் போராட்டம்

அதன்படி நாகையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல்ஹாசன் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.