ETV Bharat / state

புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

author img

By

Published : Apr 4, 2022, 1:08 PM IST

மயிலாடுதுறையில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல்
புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல்

இந்தியாவில் அண்மைக்காலமாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பெருநகரமான சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110-ஐ நெருங்கி வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோலின் விலை 110-ஐ கடந்து விற்பனையாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மயிலாடுதுறையில் இன்று(ஏப்ரல்.04) காலை நிலவரப்படி இந்தியன் ஆயில் நிறுவன நிலையங்களில் பெட்ரோல் ரூ.110.69 காசுக்கும், டீசல் 100.78 காசுக்கும் விற்பனையாகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன நிலையங்களில் 6 காசுகள் குறைவாக பெட்ரோல் ரூ.110.73 காசுக்கும், டீசல் 100.82 காசுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தும், டீசல் விலை ரூ.100-ஐ கடந்தும் விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.