ETV Bharat / state

"விபத்தில் வலது கையை இழந்தும், தன்னம்பிக்கையால் ஆட்சியரானேன்" - ஆட்சியர் மகாபாரதி ஊக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 11:07 AM IST

IAS Mahabharathi at school: மயிலாடுதுறையில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 10ம் வகுப்பு தொடக்க விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, விபத்தில் வலது கையை இழந்தும், தன்னம்பிக்கையால் ஆட்சியரானேன் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.

மயிலாடுதுறை பள்ளியில் பத்தாம் வகுப்பு துவக்க நிகழ்ச்சி
மயிலாடுதுறை பள்ளியில் பத்தாம் வகுப்பு துவக்க நிகழ்ச்சி

மயிலாடுதுறை பள்ளியில் பத்தாம் வகுப்பு துவக்க நிகழ்ச்சி

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டையில் அரசு மாதிரி பள்ளியில் நேற்று (செப். 8) ஆண்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியில் பத்தாம் வகுப்பு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்தாம் வகுப்பை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு பாட நூல்களை வழங்கினார்.

திறன் பயிற்சி: உண்டு உறைவிடப் பள்ளியாக துவக்கப்பட்ட இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவரும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கலை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் படிப்பைத் தொடர முதன்மை நிறுவனங்களில் சேர்க்கை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம், பறையாட்டம், கராத்தே நிகழ்ச்சிகளை நடத்தினர். மாணவ மாணவிகள் கைகளால் ஓடுகளை உடைத்து திறமைகளை வெளிக்காட்டினர். மாநில அளவில் சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநரை கண்டித்து பல்கலைக்கழகம் முன் ஆர்ப்பாட்டம்... நெல்லையில் பரபரப்பு!

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "இந்த பள்ளியில் கராத்தே, சிலம்பம், பறை உள்ளிட்ட பிற கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரியில் படித்த நிலையில், தன்னால் மாவட்ட ஆட்சியராக உயர முடிந்தது

தனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக வலது கையை முற்றிலும் எடுக்கப்பட்ட நிலையில், இடது கையால் எழுதி பழக தொடங்கினேன். இதன் காரணமாக வலது மூளை மூலம் சிந்திக்கும் ஆற்றலை பெற முடிந்தது. இதனால் எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.

எல்லா கலைகளையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். படிக்கும் போது தொய்வு ஏற்பட்டால் உங்களுக்கு பிடித்த கலைகள், விளையாட்டுகள் போனறவற்றில் ஈடுபட்டால் மூளை புத்துணர்ச்சி அடையும். பண்முகத்தன்மை கொண்டவராக திகழ்வதற்கு அனைத்து கலைகளையும் ரசிக்க வேண்டும், கற்றுகொள்ள வேண்டும்.

ஓய்வு நேரங்களில் இடது கையால் எழுதி பழகினால் நிறைய மாற்றங்களை மாணவர்கள் பெறலாம்" என்று மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கோவை மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. காலை உணவை சாப்பிட்டு பாடம் எடுத்து மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.