ETV Bharat / state

சிறுமியை கர்ப்பமாக்கிய இரண்டு முதியவர்கள் கைது

author img

By

Published : May 6, 2022, 10:31 PM IST

மதுரை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு முதியவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

sexual harassment  school girl pregnant  two men arrested in madurai  madurai school girl sexual harassment  madurai school girl pregnant  சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்கள்  மதுரையில் சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்கள்  பள்ளி மாணவி கர்ப்பம்  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்கள்

மதுரையை சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இறந்த நிலையில், தாயுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே சிறுமியை அவரது தாயார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை செய்தனர். அதில், சிறுமியின் வீட்டின் அருகே இருக்கும் முதியவர், இவரை மிடட்டி பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார்.

இதனையறிந்த சிறுமி தந்தையின் நண்பர், வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி சிறுமியை‌ பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்த வகையில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி, குழந்தையை ஆட்டோவில் தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.