ETV Bharat / state

தமிழகத்தின் முக்கிய கஞ்சா வியாபாரிகள் கைது: ஆந்திராவில் அதிரடி காட்டிய மதுரை போலிஸ்

author img

By

Published : Jun 14, 2023, 9:21 AM IST

ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து கஞ்சாவை வாங்கி தமிழகத்திற்க்கு கடத்திய 4 முக்கிய கஞ்சா மொத்த வியாபாரிகளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் அதிரடி காட்டிய மதுரை போலிஸ்
தமிழகத்தின் முக்கிய கஞ்சா வியாபாரிகள் கைது

மதுரை: போதை பொருளான கஞ்சாவை ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து பெருமளவில் வாங்கி தமிழகத்திற்க்கு கடத்தி வியாபாரம் செய்யும் செயலில் சிலர் ஈடுபட்டு வந்தனர். அதில் முக்கிய நபரான ஜெயக்குமார் என்ற ஜேகேவை கைது செய்யும் முயர்ச்சியில் மதுரை மாநகர காவல்துறை மூன்று தனிப்படைகளை அமைத்தது. அதில் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் மகேஷ், காவல் ஆய்வாளர்கள் பூமிநாதன், பெத்துராஜ், முருகன், காசி ஆகியோர் இருந்தனர்.

சமீபத்தில் 2090 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஒடிசா மால்கன்கிரியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஜேகே மற்றும் அவரது கூட்டாளிகள் பற்றி கிடைத்த இரகசிய தவகலின் பேரில், தனிப்படையினர் உடனடியாக ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். இவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களிலிருந்து, கிலோ கனக்கில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, அவற்றை தமிழகமெங்கும் கடத்தியும், இராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தியும் வந்துள்ளனர்.

இந்நிலையில் ஜேகே அளித்த தகவலின் பேரில், கஞ்சாவை விற்பனை செய்ய உதவி வந்த அவரது கூட்டாளிகளான ராதா என்ற ராதாகிருஷ்ணன், சிவக்குமார் என்ற வாழைப்பழ சிவக்குமார், ஜோஸ் என்ற மெர்வின் ஜோஸ் ஆகியோரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் அனகாபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் அந்தந்த மாநில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மாநகருக்கு கொண்டு வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

அவரிடமிருந்து, ரூ.4 லட்சம் பணம், 3 செல்போன்கள், 3 மோடம், போலி வாகன நம்பர் பிளேட்டுகள் மற்றும் கடத்தலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட கார் 1 ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட ஜேகே மீது தமிழகமெங்கும் 7 கஞ்சா வழக்குகள் உட்பட 26 குற்ற வழக்குகளும், சிவக்குமார் மீது 6 கஞ்சா வழக்குகள் உட்பட 13 குற்ற வழக்குகளும், ராதாகிருஷ்ணன் மீது 5 கஞ்சா வழக்குகள் உட்பட 6 குற்ற வழக்குகளும், மெர்வின் ஜோஸ் மீது 1 கஞ்சா வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகளும் உள்ளன.

மதுரை மாநகர காவல் துறை கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் அவர் கூட்டாளிகளின் நடவடிக்கைகளை கடந்த 6 மாதகாலமாக கண்காணித்து, அவர்களது நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் துரிதமான நடவடிக்கைகள் மூலம் எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் க.ச. நரேந்திரன் நாயர், இகாப., பாராட்டினார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை: ஏடிஎம் மையத்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.