ETV Bharat / state

Sunday Lockdown-ல் தூங்கிய தூங்கா நகரம்

author img

By

Published : Jan 23, 2022, 11:07 AM IST

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடர்ந்து மூன்றாவது வாரமாக மதுரையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வெறிச்சோடி காணப்படும் மதுரை
வெறிச்சோடி காணப்படும் மதுரை

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

27 நிரந்தர சோதனைச் சாவடிகளில் மக்கள் யாரும் நடமாடுகிறார்களா, வாகனங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனவா என்பது குறித்து சோதனை நடைபெறுகிறது.

80 தற்காலிகச் சோதனைத் தடுப்பு வேலிகள் அமைத்து காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளான கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும், காவல் துறையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் வைத்து வாகனங்களில் வருபவர்களைச் சோதனை செய்து, பின்னர் அனுப்பி வைக்கின்றனர்.

வெறிச்சோடி காணப்படும் மதுரை

இந்நிலையில், அதிகரிக்கும் கரோனா தொற்றின் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு, மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Sunday Lockdown - அரசு அறிவுறுத்தலின்படி ஆட்டோ, டாக்ஸிக்கள் இயக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.