ETV Bharat / state

தேவகோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாதத்திருவிழா நடத்த அனுமதி!

author img

By

Published : Aug 5, 2022, 10:59 PM IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாதத்திருவிழா நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.

Permission to conduct Adi month festival at Devakottai Muneeswarar temple
Permission to conduct Adi month festival at Devakottai Muneeswarar temple

மதுரை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச்சேர்ந்த முருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தேவகோட்டை பகுதியில் உள்ள தத்தாத்ரேய முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிழா நடத்துவதற்கு தாசில்தார் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கி அனுமதி வழங்க மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது; அப்போது மனுதாரர் தரப்பில் தேவகோட்டை தாசில்தார் தத்தாத்ரேய முனீஸ்வரர் கோயிலில் திருவிழாவில் முதல் நாளில் முதல் மண்டகப்படி அமைப்பது தொடர்பாக இரு குழுவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது;அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தி எந்த முடிவும் கிடைக்காத நிலையில் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி வழக்கை பொறுத்தவரை வட்டாட்சியர் அதிகாரத்தை மீறி திருவிழாவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; எனவே தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:'விருப்ப ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதியப்பலன்கள் கிடையாது!' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.