ETV Bharat / state

தனியார் செயலி மூலம் வரி வசூல் செய்வதை முறைப்படுத்த கோரி மனு

author img

By

Published : Oct 25, 2022, 8:55 PM IST

கிராமங்களில் வரி வசூல் செய்யப்பட உதவும் தனியார் செயலி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என கோரி வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு விசாரணைக்கு வந்தது.

தனியார் செயலி மூலம் வரி வசூல் செய்யவதை முறைபடுத்த வேண்டும் - மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு
தனியார் செயலி மூலம் வரி வசூல் செய்யவதை முறைபடுத்த வேண்டும் - மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு

மதுரை: தேனி மாவட்டத்தைச்சேர்ந்த பெத்துரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள், பேரூராட்சிகளில் குடிநீர் வரி, சொத்துவரி, மற்றும் பல வரிகள் வசூல் செய்யப்படுகிறது. இங்கு வசூல் செய்யப்படும் வரிகள் கிராமங்கள், பேரூராட்சிகளின் வளர்ச்சிகளுக்கானது.

இவ்வாறு கிராமங்கள், பேரூராட்சிகளில் வசூல் செய்யப்படும் தொகை ஆளுநர் மற்றும் தமிழ்நாட்டு அரசின் மூலம் தணிக்கை செய்யப்படும். தமிழ்நாட்டிலுள்ள பல கிராமங்கள், பேரூராட்சிகளில் குடிநீர் வரி, சொத்துவரி, மற்றும் பல வரிகள் வசூல் செய்ய சாப்ட்வேர் உள்ளது.

வரி வசூல் செய்ய பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் நேஷனல் இன்ஃபர்மேஷன் சென்டர் (NIC) உறுவாக்கப்பட்டது. இந்த சாப்ட்வேர் மூலம் வரி வசூல் செய்யப்படும் தொகை அந்தந்த கிராமம் மற்றும் பேரூராட்சிகளின் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுவதில்லை. தனியார் சாப்ட்வேர் கம்பெனியின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

மேலும், தனியார் சாப்ட்வேர் கம்பெனி கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளின் வரிகளை வசூல் செய்கின்றனர். ஆனால் இதற்கான எந்த அரசாணை இதுவரை இல்லை. இவையனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், தனியார் சாப்ட்வேர் கம்பெனி கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் வரி வசூல் செய்யும் தொகை சரியாக அந்தந்த கிராம வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறதா? என்ற விபரம் முறையாக தெரிவிக்கப்படவில்லை.

எனவே, கிராமங்கள், பேரூராட்சிகளில் சாப்ட்வேர் மூலம் வரிகளை வசூல் செய்யும் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். முறைப்படுத்த வேண்டும். அந்தந்த கிராமங்கள் பேரூராட்சிகளில் வசூல் செய்யப்படும் தொகை அந்தந்த கிராம வங்கிகளில் செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கம் மிக முக்கியமான ஒன்று எனக்கூறி எனவே வழக்கு குறித்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வளங்கள் துறை செயலர், பேரூராட்சி இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: ’தமிழ் எங்கள் மானம், இந்தித் திணிப்பு அவமானம்..!’ - வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.