ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் - நிர்வாகம் அறிவிப்பு

author img

By

Published : Nov 4, 2022, 4:44 PM IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Etv Bharatமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
Etv Bharatமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்றை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள இணையதளம் மூடப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துணை ஆணையர் அருணாசலம் இன்று (நவ-4)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கென முன்னர் தனியார் நிறுவனம் மூலம் ஏற்படுத்தப்பட்ட இணையதளமான www.maduraimeenakshi.org மூடப்பட்டு, அதற்குப் பதிலாக தமிழ்நாடு அரசு இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அலுவல்சார் இணையதளம் (Official Website) உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இணையத்தேடு பொறிகளில், Hit அடிப்படையில் அணுகக்கிடைக்கும் முந்தைய இணையதளமான www.maduraimeenakshi.org-யை அணுகும் பயனர் புதிய அலுவல்சார் இணைய தளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in-க்கு தானாகவே திசைமாற்றப்பட்டு, அதன்மூலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோயிலில் நடைபெறும் உபய சேவைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றை இந்த இணையதளம் இத்திருக்கோயிலுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அரசு இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியைத் தவிர இத்திருக்கோயிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' என கோயில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கிராமசபைக்கூட்டத்தில் நெகிழ்ச்சி; தூய்மைப்பணியாளர்கள் காலில் விழுந்த ஊராட்சித்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.