ETV Bharat / state

மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் பண மோசடி

author img

By

Published : Aug 25, 2022, 10:15 PM IST

மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பண மோசடி நடந்தது குறித்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் பெயரில் பண மோசடி
மாநகராட்சி ஆணையாளர் பெயரில் பண மோசடி

மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிம்ரன்ஜித் சிங் காலோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்று தற்போது பணிபுரிந்து வருகிறார். இவர் நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகள் குறித்து நேரடி ஆய்வு செய்வதோடு, பணி விவரங்கள் குறித்து அவ்வப்போது மாநகராட்சி மண்டல, இணை மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திவருகிறார்.

இந்நிலையில் ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் உதவி ஆணையாளர்களுக்கு தனிதனியாக மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் வேண்டும் என அனுப்பியுள்ளார். இதனை நம்பி சிலர் பணத்தை அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர். சிலர் நேரடியாக ஆணையாளரை தொடர்பு கொண்டு பணம் குறித்து சில அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அப்போது அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் சார்பில் இந்த மோசடி தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்த எண்ணை தொடர்புகொண்டபோது பெண் ஒருவர் பேசியதும், மோசடியாக பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் (அமேசான்) பெயரில் இது போன்ற மோசடி நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெற்றுள்ளது மாநகராட்சி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் போக்கு காட்டும் சிறுத்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.