ETV Bharat / state

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு.. மு.க. அழகிரி நேரில் அஞ்சலி..

author img

By

Published : Jan 19, 2023, 12:14 PM IST

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் வடிவேலு தாயார் மறைவு
நடிகர் வடிவேலு தாயார் மறைவு

நடிகர் வடிவேலு தாயார் மறைவு

மதுரை: வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் (எ) பாப்பா (87), நேற்றிரவு (ஜன 18) உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையினரும், வடிவேலுவின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இறுதி சடங்களுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. நகைச்சுவை நடிகர்கள் பலர் மதுரைக்கு புறப்பட்டுள்ளனர்.

மதுரை விரகனூர் பகுதியில் சரோஜினி வசித்து வந்தார். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. மதுரை அப்போலோ மருத்துவமனையில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேரில் சென்று சரோஜினி அம்மாளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதோடு வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.