ETV Bharat / state

படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? - எஸ்.வி.சேகரிடம் நீதிபதி கேள்வி

author img

By

Published : Aug 31, 2021, 1:20 PM IST

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

SV sekar
SV sekar

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் புகார் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கெதிரான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில்," அந்தப் பதிவை படிக்காமல் forward செய்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்" தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி," படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? அவ்வாறு forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது.

அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 1 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.