ETV Bharat / state

மதுரை-தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

author img

By

Published : Jan 6, 2023, 6:53 AM IST

மதுரை தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்கு ரயில்வே அமைச்சகம் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கான ரயில்வே நிலைக்குழு கூட்டம்
நாடாளுமன்றத்துக்கான ரயில்வே நிலைக்குழு கூட்டம்

நாடாளுமன்றத்துக்கான ரயில்வே நிலைக்குழு கூட்டம்

மதுரை: நாடாளுமன்றத்துக்கான ரயில்வே நிலைக்குழு கூட்டம் நேற்று (ஜன.5) நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலைக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகள், இரட்டை இரயில் பாதை பணிகள், மின்மயமாக்கல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரூக் அப்துல்லா, கெளசலேந்திர குமார், ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கௌசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில், மதுரை தூத்துக்குடிக்கான புதிய ரயில்வே விரிவாக்கத்திட்டம் 2,053 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சமர்பிக்கப்பட்டு விட்டது. இதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும். வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில்; கன்னியாகுமரி- திருவனந்தபுரம் பிரிவுகளில் மின்சார மயத்துடன் கூடிய இரட்டைப்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

முதலில் 2022 ஆகஸ்ட் 15-க்குள் இந்த திட்டங்கள் முடிவடையும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால் இது மேலும் மூன்றாண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த இரட்டை பாதை திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி விரைந்து போதிய நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை முடிக்க வேண்டும்.

கூடல் நகரை மதுரையின் இரண்டாவது முனையமாக தயார் செய்ய வேண்டும். அனைத்து ரயில்களும் கூடல் நகரில் நின்று செல்ல வேண்டும். இதன் மூலம் மதுரை சந்திப்பின் நெருக்கடி தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற செயலக இயக்குநர் மாயா லிங்கி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: video: மருத்துவரின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் மருந்துகள் பயன்படுத்துவது ஆபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.