ETV Bharat / state

கஞ்சா பதுக்கிய மூன்று பெண்கள் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Dec 26, 2022, 10:49 PM IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பெண்களை மதுரை மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா பதுக்கிய மூன்று பெண்கள் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா பதுக்கிய மூன்று பெண்கள் கைது; 22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை: கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும், சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை மானூத்து முனியாண்டி கோவில் மொட்டைபாறை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எழுமலை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

இதில் மானூத்தைச் சேர்ந்த பவுன் தாய் (56), பிரபாவதி என்ற பேச்சியம்மாள் (34), பேச்சியம்மாள் (45) ஆகியோர் பதுக்கி வைத்திருந்த சுமார் 22 கிலோ கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா மொத்தமாக கொள்முதல் செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது குறித்து மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும்” என எச்சரிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.