ETV Bharat / state

மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.2,500!

author img

By

Published : Feb 11, 2023, 12:47 PM IST

மதுரையில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால், ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ மல்லிகை
ஒரு கிலோ மல்லிகை

மதுரை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் பனிப்பொழிவு நீடிக்கிறது. பொதுவாகவே பனிக்காலங்களில் பூக்களின் உற்பத்தி குறைவதுடன், அதன் விலையும் உயர்வது வாடிக்கை. மேலும் பண்டிகை நாட்கள், முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக, பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக மதுரை மண்ணுக்கு உரிய தனித்துவமான மதுரை மல்லிகை அதிகளவில் விற்பனையாகிறது. இந்நிலையில் மதுரை மல்லிகை இன்று (பிப்.11) ஒரு கிலோ ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப்பூ கிலோ ரூ.1,500, பிச்சி ரூ.1,500, கனகாம்பரம் ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், "பிற பூக்கள் அனைத்தும் சற்று விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன. மல்லிகைப்பூ விலை மட்டும் அதிகரித்துள்ளது. மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் அதன் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது." என்றார்.

பனிப்பொழிவு குறைந்த பின் பூக்களின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கும். இதனால் வரத்து அதிகரித்து, விலை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என, மதுரை மாட்டுத்தாவணி சந்தை பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நொடிபொழுதில் விபத்து.. அண்ணன் கண்முன்னே பலியான தங்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.