ETV Bharat / state

நீட் முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள் என்ன? - சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

author img

By

Published : Jul 9, 2022, 6:41 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடு நடைபெறாமல் இருக்க என்னென்ன நவீன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சிபிஐ மற்றும் சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகளை குறித்து சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகளை குறித்து சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த ரஷித் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தனக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீட் தேர்வில் இது போன்ற ஆள்மாறாட்டம் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் சிபிஐயை எதிர் மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பி இருந்தது.

கடந்த விசாரணையின் போது, நீட் தேர்வில் முறைகேடுகள், ஆள் மாறட்டத்தை தடுக்க எந்த வகையான நவீன முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு நேற்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர், நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு தேர்வரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் தேர்வு மையத்தில் அறை கண்காணிப்பாளர், தேர்வரின் புகைப்படமும், அனுமதி சீட்டில் உள்ள புகைப்படமும் சரியாக உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.

மேலும் கண் விழித்திரை பதிவு மற்றும் விண்ணப்பிக்கும் பொழுது கைரேகை பதிவு, மற்றும் தேர்வு மையத்தில் கைரேகை பதிவு , மற்றும் கவுன்சிலிங்கின் போது கைரேகை பதிவு செய்யும் முறை ஆகிய 3 இடங்களில் கைரேகை பதிவு முறையை கொண்டு வர வேண்டும். பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம்.

மேலும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சோதனை முறைகளை எளிதாக்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தலாம். இதைத் தொடர்ந்து, நீதிபதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு என்பது மிக முக்கியமானது. இதில் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெறாமல் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக தடுக்க வேண்டும்.இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் கண்காணிப்பது நமது கடமை.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நவீன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சிபிஐயும் சிபிசிஐடியும் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.