ETV Bharat / state

'கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்'  - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

author img

By

Published : Oct 13, 2019, 1:19 PM IST

'கீழடியை அகழாய்வைக் காண பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு காலவரையறை நிர்ணயம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

CPM SECRETARY BALAKRISHNAN

சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள கீழடி அகழாய்வுக் களத்தை காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தந்தார். அவருடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அக்கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர். கீழடி ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டறிந்து, அகழாய்வு நடக்கும் இடத்தை பார்வையிட்டபோது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு கே.பாலகிருஷ்ணன் சிறப்பு பேட்டியளித்தார்.

அதில், 'கீழடி அகழாய்வுப் பணிகளும் அதில் கண்டறியப்பட்ட பொருட்களும் பிரமிக்கும் வகையில் உள்ளன. இவை தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் தமிழ்நாடு தொல்லியல்துறை பாதுகாப்புடன் பராமரித்து வருகிறது.

அந்தக் காலகட்டத்திலேயே ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான தொழில் முறை சார்ந்த அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதன் தொடர்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

மிகப் பெரிய தொழிற்சாலை கீழடியில் இயங்கியிருப்பதற்கான தொல்லியல் அடையாளங்கள் கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது, வேளாண்மையில் மட்டுமன்றி, தொழில் நுட்பம் சார்ந்த அறிவிலும் தமிழர்கள் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். கீழடி அகழாய்விற்காக இடம் அளித்த விவசாயக் குடும்பத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உரிய முறையில் மரியாதை செலுத்த வேண்டும்.

இந்த ஆய்வு மேலும் பல ஆண்டுகள் தொடரவிருக்கிறது என்பதால், நில உரிமையாளர்களுக்கு உரியத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி அந்நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய மற்றும் தமிழ்நாடு வரலாற்றை மீள் ஆய்வுக்கு கீழடி உட்படுத்தியிருக்கிறது. உலகின் மூத்த நாகரிகமாக இது கருதப்படுகிறது.

சிந்துசமவெளியுடன் கீழடியும் தொடர்பு கொண்டிருப்பதற்கான தொல்லியல் எச்சங்கள் இங்கே கிடைத்திருப்பது பெருமிதத்திற்குரியது. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும் இந்த ஒப்பீட்டைச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலோட்டமாக இல்லாமல், கீழடியில் மிகப் பெரிய ஆய்வு மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

கீழடி ஆய்வில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

அதேபோன்று கீழடியைக் காண்பதற்கு தொடர்ந்து பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். இதற்கு காலவரையறை நிர்ணயம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கு போதுமான கட்டுமான வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:

’கீழடி வரலாறு ஆண், பெண், சாதி பேதம் இல்லாதது’ - சு.வெங்கடேசன்

Intro:கீழடியைப் பார்வையிட பொதுமக்களை தொடர்ந்து தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

கீழடியை அகழாய்வைப் பார்வையிட பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு காலவரையறை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
Body:கீழடியைப் பார்வையிட பொதுமக்களை தொடர்ந்து தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

கீழடியை அகழாய்வைப் பார்வையிட பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு காலவரையறை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி அகழாய்வுக் களத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், 'கீழடி அகழாய்வைப் பார்வையிட்ட பின்பு தமிழர்களின் தொன்மை, பண்பாடு குறித்து பிரமிப்பு ஏற்படுகிறது. தமிழர்களின் கலாச்சாரத்திற்கு கீழடி எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் தமிழக தொல்லியல்துறை பாதுகாப்புடன் பராமரித்து வருகிறது.

அந்தக் காலகட்டத்திலேயே ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான தொழில் முறை சார்ந்த அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதன் தொடர்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

மிகப் பெரிய தொழிற்சாலை கீழடியில் இயங்கியிருப்பதற்கான தொல்லியல் அடையாளங்கள் கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது, வேளாண்மையில் மட்டுமன்றி, தொழில் நுட்பம் சார்ந்த அறிவிலும் தமிழர்கள் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

கீழடி அகழாய்விற்காக இடம் அளித்த விவசாயக் குடும்பத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு அவர்களுக்கு உரிய முறையில் மரியாதை செலுத்த வேண்டும்.

இந்த ஆய்வு மேலும் பல ஆண்டுகள் தொடரவிருக்கிறது என்பதால், நில உரிமையாளர்களுக்கு உரிய தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி அந்நிலங்களை கையப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய மற்றும் தமிழக வரலாற்றை மீள் ஆய்வுக்கு கீழடி உட்படுத்தியிருக்கிறது. உலகின் மூத்த நாகரிகமாகக் கருதப்படுகிறது சிந்துசமவெளியுடன் கீழடியும் தொடர்பு கொண்டிருப்பதற்கான தொல்லியல் எச்சங்கள் இங்கே கிடைத்திருப்பது பெருமிதத்திற்குரியது. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும் இந்த ஒப்பீட்டைச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலோட்டமாக இல்லாமல், கீழடியில் மிகப் பெரிய ஆய்வு மையத்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

அதேபோன்று கீழடியைக் காண்பதற்கு தொடர்ந்து பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். இதற்கு காலவரையறை நிர்ணயம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கு போதுமான கட்டுமான வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்தப் பேட்டியின் போது மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அக்கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் விஜயராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.