ETV Bharat / state

விளையாட்டு காட்டிய புதுகை மாடு... 14 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரம் விஜய்!

author img

By

Published : Jan 15, 2020, 7:36 PM IST

Updated : Jan 15, 2020, 8:01 PM IST

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

jallikkattu
jallikkattu

தை திருநாளின் முதல் நாளான இன்று பொங்கல் கொண்டாட்டம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திருநாளில் தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் விதமாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு

இதில், 8 அணிகள் பங்கேற்றன. ஏறக்குறைய 630 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 600 வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் 14 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த பரத்குமார் 13 காளைகளைப் பிடித்து இரண்டாவது வீரராகவும், முத்துபட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு 10 காளைகளை பிடித்து மூன்றாவது வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், சிறந்த மாடுபிடி வீரரான விஜய்க்கு திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் இருசக்கர வாகனத்தை பரிசளித்தார். புதுக்கோட்டையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் அனுராதா என்பவரின் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசைப் பெற்றது. மதுரையைச் சேர்ந்த ஜி.ஆர். கார்த்திக் என்பவரின் காளை இரண்டாவது சிறந்த காளையாக தேர்வானது.

Intro:அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்துபுரம் விஜய் சிறந்த மாடுபிடி வீரர் பரிசை வென்றார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக ஜெய்ஹிந்துபுரம் விஜய் தேர்வு செய்யப்பட்டார். ஏறக்குறைய 14 காளைகளைப் பிடித்து சாதனை படைத்தார்.Body:அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்துபுரம் விஜய் சிறந்த மாடுபிடி வீரர் பரிசை வென்றார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக ஜெய்ஹிந்துபுரம் விஜய் தேர்வு செய்யப்பட்டார். ஏறக்குறைய 14 காளைகளைப் பிடித்து சாதனை படைத்தார்.

தைத்திங்கள் முதல் நாளான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மான் உள்ளே இருந்த போது மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு துவங்கிய போட்டிகள் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் சிறந்து விளையாடிய வீரர்கள் அடுத்து அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். ஏறக்குறைய 630 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 600 வீரர்கள் பங்கேற்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் தைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் 14 காளைகளை பிடித்து சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு பெற்றார். சோலை அழகுபுரம் தைச் சேர்ந்த பரத்குமார் 13 காளைகளைப் பிடித்து இரண்டாவது வீரராகவும் முத்து பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு10 காளைகளை பிடித்து மூன்றாவது சிறந்த வீரராகத் தேர்வு பெற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ சரவணன் மோட்டார் பைக் பரிசளிக்கிறார்

புதுக்கோட்டையைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் அனுராதா என்பவரின் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசைப் பெற்றது. மதுரையைச் சேர்ந்த ஜி ஆர் கார்த்திக் என்பவரின் காளை இரண்டாவது சிறந்த காளையாக தேர்வு பெற்றது.Conclusion:
Last Updated :Jan 15, 2020, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.