ETV Bharat / state

‘ஈபிஎஸ்-ஐ சந்தித்து ஓபிஎஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ - செல்லூர் ராஜு

author img

By

Published : Jul 15, 2022, 5:23 PM IST

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் எற்றுக் கொள்வோம் எனவும், தனது செயலுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ex minister sellur raju  ex minister sellur raju press meet  ex minister sellur raju about ops  madurai news  madurai latest news  செல்லூர் ராஜு  செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு  மதுரை செய்திகள்  முக்கிய செய்திகள்
செல்லூர் ராஜு

மதுரை: அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிச்சாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பொறுப்பு வழங்கினார். அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சராக்க பாடுபடுவேன். அதிமுக தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிபட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டு இருக்கிறது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம். ஓ.பன்னீர்செல்வம் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பன்னீர்செல்வம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. அதிமுகவில் சாதி இல்லை. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம்.

அதிமுகவை நம்பியவர்கள் கெட்டதில்லை. அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது. தொண்டர்களின் பலமே அதிமுக”என கூறினார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்ஸின் அடுத்தடுத்த பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.