ETV Bharat / state

திமுக அரசு வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் - அண்ணாமலை

author img

By

Published : Jan 3, 2022, 3:14 PM IST

Updated : Jan 3, 2022, 4:22 PM IST

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து டி.ஆர். பாலுவுக்கும், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே குழப்பம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டும் அண்ணாமலை, திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

்

மதுரை: வீரபாண்டிய கட்டபொம்மன் 262ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், "பாஜகவைப் பொறுத்தவரை கறுப்பு, சிவப்பு, நீலம் என அனைத்து நிறங்களையும் அரவணைத்து வளர்ந்துகொண்டிருக்கிறது. யாரையும் பிரித்துப் பார்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செய்யும் அண்ணாமலை
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செய்யும் அண்ணாமலை

வைகோ அதை விரைவில் உணர்வார்

ராகுல் காந்தி, நாடு கடத்தப்படுவதைப்போல அடிக்கடி நாட்டைவிட்டு வெளியேறுகிறார். அதற்கு அந்தக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இதுவரை பதில் கூற மறுக்கிறார். காங்கிரஸ் கட்சியின் வரலாறு இந்தியா முழுவதும் பாஜகவால் முடித்து-வைக்கப்பட்டுவருகிறது.

தற்போது திமுகவின் பி டீமாக தமிழ்நாட்டில் செயல்படும் காங்கிரஸை இங்கும் முடிவுக்குக் கொண்டுவருவோம். கடந்த முறை நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அங்குள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியாக நின்றன.

ஆனால் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகள் அனைத்தும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன. அதுபோன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணையக் கூறுவது தவறானதாகவே முடியும். அதை அவரும் விரைவில் உணர்வார்.

வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைங்க

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் விமான போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்து முன்னரே கோரிக்கைவைத்துள்ளோம்.

ஆனால் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் விமான போக்குவரத்து அமைச்சர் கூறியதாக ஒரு தகவல் திரித்துப் பரப்பப்படுகிறது. நிச்சயமாக மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படும்.

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து டி.ஆர். பாலுவுக்கும், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே குழப்பம் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

மோடி பார்வையாளராக மட்டும் வரவில்லை

தமிழ்நாடு அரசு சார்ந்த நிகழ்ச்சியின் பொருட்டு தமிழ்நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகைதருகிறார். அந்த நேரத்தில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடியைப் பங்கேற்க நாங்கள் வேண்டுகோள்விடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து விதித்துள்ள கட்டுப்பாடுகளைச் சிறிதும் மாறாமல் அந்த நிகழ்ச்சியை நடத்துவோம் என நாங்கள் உறுதி கூறுகிறோம்.

தமிழ் மக்களின் பண்பாட்டை பாஜக பெரிதும் மதிக்கிறது, அதை ஒருபோதும் மாற்ற முயற்சிக்கப் போவதில்லை. நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போது பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுசெய்து அதனை 'மோடி பொங்கல்' என்று நாங்கள் பெயரிட்டு அழைக்கிறோம்.

ஒரு பண்பாட்டின் நிகழ்வில் பிற அரசியல் தலைவர்களைப் போன்று நரேந்திர மோடி பார்வையாளராக வரவில்லை. பங்கேற்பாளராகக் கலந்துகொள்கிறார். இது தமிழ்நாட்டிற்குப் பெருமைதானே" என்றார்.

இதையும் படிங்க: 'ஜிஎஸ்டியில் டி.ஆர். பாலு, பிடிஆர் எதிரெதிர் நிலைப்பாடு; தெளிவுபடுத்துங்க ஸ்டாலின்!'

Last Updated :Jan 3, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.