ETV Bharat / state

'அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஒன்றிணைந்து நடத்துவோம்'

author img

By

Published : Jan 14, 2020, 10:56 PM IST

மதுரை: அனைவரும் இணைந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தித் தரவேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.

judge manikkam
judge manikkam

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளான தை ஒன்றாம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பல்வேறு தடைகளை மீறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நடக்கவிருப்பதால் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், "உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சிறப்பாக நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் என அனைவரும் தங்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளனர். நாம் அனைவரும் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், எந்த ஒரு சிறு தவறும் ஏற்படாமல் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அவனியாபுரத்தை பார்வையிடும் அரசு அலுவலர்கள்

இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், "தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டை மிகச் சிறப்பாக நடத்திவருகிறது. அலங்காநல்லூரில் பங்குபெறும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ஒரு காரையும், சிறந்த காளைகளுக்கு ஒரு காரையும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து வழங்குவார்கள்" என்றார்.

Intro:அனைவரும் இணைந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தித் தரவேண்டும் - ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் பேட்டி*

*சிறந்த வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரண்டு கார்கள் வழங்க உள்ளனர் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*Body:*அனைவரும் இணைந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தித் தரவேண்டும் - ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் பேட்டி*

*சிறந்த வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரண்டு கார்கள் வழங்க உள்ளனர் - அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி*

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள் ஆன தை 1ம் தேதியான நாளை நடைபெற உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பல்வேறு தடைகளை மீறி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நாளை நடைபெற உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வேலைகளை ஆய்வு செய்வதற்காக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி வினய் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

*பின் செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் கூறும்போது*

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சிறப்பாக நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியர் காவல் துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றி உள்ளனர்.

நாம் அனைவரும் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு எந்த ஒரு சிறு தவறு ஏற்படாமல் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

*பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும்போது*

தமிழக அரசு ஜல்லிக்கட்டு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

இந்த வருடம் எம்ஜிஆர் பிறந்த தின விழா நடைபெற உள்ளதால் இந்த வருடம் ஜல்லிக்கட்டைகாண முதல்வர் மற்றும் துணை முதல்வர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அலங்காநல்லூரில் பங்குபெறும் சிறந்த விளையாட்டு வீரர் ஒரு காரும் மற்றும் சிறந்த காளைகளுக்கு ஒரு காரும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சென்னையில் வைத்து வழங்க உள்ளனர் என அமைச்சர் கூறினார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.