ETV Bharat / state

பட்டியலின வெளியேற்றம்: புதிய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உதயம்

author img

By

Published : Jan 19, 2022, 7:50 PM IST

பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி 70 அமைப்புகள் இணைந்த புதிய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உதயமானது.

தேவேந்திர
தேவேந்திர

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலடி, குடும்பன், பள்ளர், பண்ணாடி, வாதிரியன் போன்ற ஏழு சாதி பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பொதுவான பெயரில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

ஓபிசியாக மாற்றக் கோரிக்கை

இந்த நிலையில் பட்டியல் பிரிவிலிருந்து (SC) நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றன.

புதிய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு

இதனை வலியுறுத்தி இன்று மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் 70 அமைப்புகள் சேர்ந்து புதிதாக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் பங்கேற்ற முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் காமராஜா தலைமையில் கூட்டமைப்பு உருவாக்கம் நடைபெற்றது.

புதிய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தொடக்கம்

இதில் முழுவதும் பட்டியல் வகுப்பு பிரிவிலிருந்து தேவேந்திரகுல வேளாளர் சாதியை வெளியேற்ற வேண்டுமெனப் படித்த நாங்கள் இந்த முன்னெடுப்பைக் கோருகிறோம் என்றார்.

இதையும் படிங்க: கோவா ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.