ETV Bharat / state

Madurai Train Fire : சுற்றுலா ரயிலில் திடீர் தீ விபத்து... 8 பயணிகள் பலி! கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 7:28 AM IST

Updated : Aug 26, 2023, 8:15 AM IST

மதுரையில் சுற்றுலா ரயில் தீ விபத்துக்குள்ளானதில் 8 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரயிலில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Etv
Etv

மதுரை : உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிபூரில் இருந்து வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 8 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிருக்கு ஆபத்தான வகையில் பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என போலீசார், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், ரயிலில் சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகளை மீட்கும் முயற்சியிலும், தீ யை கட்டுக்குள் கொண்டு வரும் போராட்டத்திலும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த இந்த ரயிலின் 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை ஆட்சியர் சங்கீதா, மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மதுரைக்கு உத்திரபிரதேசம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த நிலையில், ரயிலில் தேநீர் வைத்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 8 பேர் பலி அதில் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் உயிரிழந்த இரண்டு பயணிகளின் புகைப்படங்களை ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சந்திப்பு.. பெங்களூரு விரைந்தார் பிரதமர் மோடி!

Last Updated :Aug 26, 2023, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.