ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை - ஒரு சிறப்புப் பார்வை!

author img

By

Published : Jan 3, 2020, 7:04 PM IST

Updated : Jan 3, 2020, 8:24 PM IST

வாக்குச் சீட்டு முறையில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை அலுவலர்கள் எவ்வாறு தனித்தனியாக வகைபிரித்து ஓட்டுகளை எண்ணுவார்கள் என்பது பற்றிய ஒரு சிறிய விளக்கம்.

COUNTING
COUNTING

ஊரக உள்ளாட்சிகளில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்றும், இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வாக்கு சீட்டு முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த சில தகவல்களை இங்கே பார்க்கலாம்...

வாக்குகள் வகைப்படுத்தப்படும் முறை

தொடர்புடைய அலுவலர்களின் ஆணையின் படி, அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல் திறக்கப்பட்டு, பதவி - வண்ணம் அடிப்படையில் வாக்குச் சீட்டுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் பதவி - வண்ணம் அடிப்படையில், தனித்தனியாக அதே பெட்டிக்குள் போட்டு தொடர்புடைய பதவிக்கு எண்ணப்படும் அறைக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அறைக்கு எடுத்துச்செல்லும் பணியாளர்களை அடையாளம் காண அவர்களுக்கு பதவி - வண்ண அடிப்படையில், ஐந்து வகையான வண்ணங்களில் சீறுடை அணிந்தவர்கள் வாக்குப் பெட்டிகளை தூக்கிச்செல்கின்றனர். வாக்குப்பெட்டி முழுதும் பச்சை வண்ணம், ஆதலால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீருடை மூலம் பணியாளர்களை அடையாளம் காணலாம்

தரம் பிரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை உதாரணமாக, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என்றால், மஞ்சள் வண்ணம் உடுத்திய பணியாளர்கள் பெட்டியை கொண்டு சேர்க்கின்றனர். கிராம ஊராட்சித் தலைவர் என்றால் கிராம ஊராட்சி தலைவர் வாக்கு எண்ணும் அறைக்கு சிவப்பு வண்ணம் உடுத்திய பணியாளர்கள் பெட்டியை கொண்டு சேர்க்கின்றனர்.

அங்கு வாக்குச்சீட்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு 50 வாக்குச்சீட்டுகளாக அடுக்கப்படுகின்றன. பெட்டிக்குள் எடுக்கப்படும் பொழுது செல்லாத வாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, முகவர் முன்னிலையில் காண்பித்து வாக்குகள் குறிக்கப்பட்டு, 50 சீட்டுகளாக ரப்பர் கொண்டு கட்டப்படுகிறது.

வாக்குச்சீட்டும் அதன் பதவி வழி வண்ணங்களும்

கிராம ஊராட்சித் தலைவர் (Village Panchayat President) - இளஞ்சிவப்பு

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (Village Panchayat Ward Member ) - வெள்ளை

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் (District Panchayat Ward Member ) - மஞ்சள்

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் (Panchayat Union Ward Member ) - பச்சை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம்

கிராம பஞ்சாயத்திற்கு மட்டும் மக்கள் தொகை அடிப்படையில் அதிகமான மக்கள் தொகை இருக்கும் கிராம ஊராட்சிகளில், இரண்டு வகையான வண்ண வாக்குச்சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய மக்கள் தொகை அதிகம் இருக்கும் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள், இரண்டு வகையான வாக்குச்சீட்டுகளில் தங்கள் வாக்கை செலுத்துவர். அந்த வண்ணங்களில் ஒன்று நீலம் மற்றொன்று வெள்ளை ஆகும்.

வாக்கு முத்திரை இடுவதில் பணியாளர்களுக்கு விதிவிலக்கு

தபால் ஓட்டு செலுத்தும் ஊழியர்களுக்கு மட்டும் தொடர்புடைய வாக்குச்சீட்டில் ’டிக்’ மார்க் செய்து வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தபால் ஓட்டில் தொடர்புடைய ’டிக்’ மார்க்குக்கு ஏற்ப உறுதிமொழி படிவம் வைக்கப்பட்டிருக்கும்.

உறுதிமொழிப் படிவம் வாக்குப்பதிவிட்ட வாக்குச்சீட்டு ஆகிய இரண்டும் சம அளவில் இருக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ’டிக்’ ஒரே சின்னத்திலும், இட மற்றும் வலப்பக்கத்தில் இருந்தால் வாக்குச்செல்லும். இதற்கு எந்த நிறத்திலும் டிக் செய்யலாம். பொது மக்கள் வைக்கும் முத்திரையை வரைந்தால் அல்லது அச்சிட்டால் பணியாளர்களுக்கு அந்த வாக்கு செல்லாதவையாகும்.

தபால் ஒட்டில் தொடர்புடைய சின்னத்தில் ஒரு ’டிக்’ அல்லது இரண்டு ’டிக்’ ஒரே சின்னத்தில் இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வேறு எந்த அடையாளக் குறியீடும் குறிப்பாக அச்சுக் குறியீடு போல் குறிப்பிட்டு இருந்தால் அந்த வாக்கு செல்லாது. இவ்வாறான சில முறைகளை பின்பற்றியே வாக்கு சீட்டுக்களை எண்ணும் பணி நடைபெறும்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: கலைஞர் அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டம்!

Intro:Body:வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் ஒரு சிறப்பு பார்வை:


வாக்குகள் வகைப்படுத்தப்படுத்தப்படுதல்

தொடர்புடைய அதிகாரிகளின் ஆணையின் படி அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல் திறக்கப்பட்டு வாக்கு சீட்டுகள் பதவி-நிற அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் பதவி-வண்ணம் அடிப்படியில் தனித்தனியாக அதே பெட்டிக்குள் போட்டு தொடர்புடைய பதவிக்கு எண்ணப்படும் அறைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.அறைக்கு எடுத்துச்செல்லும் பணியாளர்களுக்கு பதவி-வண்ண அடிபட்டாடையில் சீருடை ஐந்து வண்ணங்களில் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டு அடையாளம் காணும் பொருட்டு கொடுத்து தூக்கிச்செல்லப்படுகின்றது.வாக்குப்பெட்டி முழுதும் பச்சை வண்ணம் ஆதலால் இந்த ஏற்பாடு.


தரம் பிரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் உதாரணமாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என்றால் மஞ்சள் வண்ணம் உடுத்திய பணியாளர்கள் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டியை கொண்டு சேர்க்கின்றனர். கிராம ஊராட்சி தலைவர் என்றால் கிராம ஊராட்சி தலைவர் வாக்கு எண்ணும் அறைக்கு சிவப்பு வண்ணம் உடுத்திய பணியாளர்கள் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டியை கொண்டு சேர்க்கின்றனர்.அங்கு வாக்குச்சீட்டுகள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் விரிக்கப்பட்டு என்ன அளவு வாக்குச்சீட்டு உள்ளதோ அதே அளவு பிரித்தெடுக்கப்பட்டு விரிக்கப்பட்டு 50 வாக்குச்சீட்டுகளை அடுக்கப்படுகின்றன எடுக்கப்படும் பொழுது செல்லாத வாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முகவர் முன்னிலையில் காண்பிக்கப்பட்டு வாக்குகள் குறிக்கப்பட்டு 50 சீட்டுகளாக ரப்பர் கொண்டு கட்டப்படுகிறது.

வாக்குச்சீட்டு மற்றும் அதன் பதவி வழி வண்ணங்கள்.
கிராம ஊராட்சித் தலைவர் இளஞ்சிவப்பு (Village Panchayat President)

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (Village Panchayat Ward Member ) -வெள்ளை.

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வண்ணம் மஞ்சள். (District Panchayat Ward Member )

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் (Panchayat Union Ward Member ) பச்சை வண்ண வாக்குச்சீட்டு


கிராம பஞ்சாயத்திற்கு மட்டும் மக்கள் தொகை அடிப்படையில் அதிகமான மக்கள் தொகை இருக்கும் கிராம ஊராட்சிகளில் இரண்டு வகையான வண்ண வாக்குச்சீட்டுகளை ஒதுக்கப்படுகின்றன.அத்தகைய மக்கள் தொகை அதிகம் இருக்கும் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் இரண்டு வகையான வாக்குச்சீட்டுகளில் தங்கள் வாக்கை செலுத்துவர்
அவற்றில் வண்ணங்களில் ஒன்றின் வண்ணம் நீல வண்ணம் மற்றொன்று வெள்ளை


வாக்குமுத்திரை இடுவதில் பணியாளர்களுக்கு விதிவிலக்கு:

தபால் ஓட்டு செலுத்தும் ஊழியர்களுக்கு மட்டும் தொடர்புடைய வாக்குச்சீட்டில் டிக் மார்க் செய்து வாக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.தபால் ஓட்டை தொடர்புடைய டிக் மார்க்குக்கு ஏற்ப உறுதிமொழி படிவம் வைக்கப்பட்டிருக்கும்.உறுதிமொழிப் படிவம் வாக்குப் பதிவிட்ட வாக்குச்சீட்டு ஆகிய இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்ட டிக் ஒரே சின்னத்தில் மேலும் இட மற்றும் வலப்பக்கத்தில் இருந்தால் வாக்கு செல்லும்.எந்த நிறத்திலும் டிக் செய்யலாம்.பொது மக்கள் வைக்கும் முத்திரையை வரைந்தால் அல்லது அச்சிட்டால் பணியாளர்களுக்கு அந்த வாகு செல்லாது.
[02/01, 11:44] ganeshkumarscience: தபால் ஒட்டில் தொடர்புடைய சின்னத்தில் ஒரு டிக் இருந்தால் இரண்டு டிக் இருந்தால் அதே சின்னத்தில் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வேறு எந்த அடையாளக் குறியீடும் குறிப்பாக அச்சு குறியீடு போல் குறிப்பிட்டு இருந்தால் அந்த வாக்கு செல்லாது.

மேற்கண்ட தகவல்களை இ டிவி பாரத்திற்காக வலங்கையவர்கள் ஞானப்ரகாஷ் மற்றும் கிருஷ்ணன் அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் வாக்கு எண்ணிக்கை மேற்பாரவையாளர்கள்.



இணைப்பு காணொலி விளக்கம்: வண்ண அடிப்படையில் மேல் உடை அணிந்து மாவட்ட,ஒன்றிய,ஊராட்சி,ஊராட்சி வார்டு அடிப்படையில் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பெட்டியை தூக்கி செல்கின்றனர்.Conclusion:
Last Updated :Jan 3, 2020, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.