ETV Bharat / state

கொக்கரக்கோ பிரியாணி கடையில் வாங்கிய சிக்கனில் புழு - பாஜக பிரமுகர் ஆவேசம்

author img

By

Published : Feb 13, 2020, 9:36 AM IST

கரூர்: பிரபல பிரியாணி கடை ஒன்றில் தான் வாங்கிய இறைச்சியில் புழு இருந்ததால் பாஜக பிரமுகர் கடை உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிரபல பிரியாணி கடையில் இறைச்சியில் புழு!
பிரபல பிரியாணி கடையில் இறைச்சியில் புழு!

கரூர் மாவட்டம் கோவை சாலையில் அமைந்துள்ள கொக்கரக்கோ என்ற பிரபல பிரியாணி கடை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கிளைகளை நடத்திவருகின்றது.

இந்நிலையில் நேற்று பாஜக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கோபிநாத் மின்சார வாரிய அலுவலகம் அருகில் இருக்கக்கூடிய கொக்கரக்கோ பிரியாணி கடையிலிருந்து வீட்டிற்கு சிக்கன் வாங்கிச் சென்றுள்ளார். அந்த இறைச்சியில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பிரபல பிரியாணி கடை

இதனையடுத்து கடைக்கு வந்து இதுகுறித்து உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கோபிநாத் கூறுகையில், ”வாங்கிச்சென்ற இறைச்சியில் புழு இருப்பதால் அக்கடையில் உள்ள வேலை செய்த சர்வர் முதல் மேலாளர் வரை பேசினேன். ஆனால் அவர்கள் உங்களால் ஆனதை செய்து விடுங்கள் எனக் கூறிவிட்டனர். இதனால் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க...'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.